Header Ads



இன்னும் 70 தற்கொலைதாரிகள் உள்ளனர் - பள்ளிவாசல்களில் அரசியல் கலந்துரையாடல் செய்கிறார்கள் - ஞானசாரா

நாட்டில் தற்கொலை குண்டுதாரிகள் இன்னும் அறுபது தொடக்கம் எழுபது பேர்வரை வெளியில் உள்ளதாக பொதுபலசேனாவின் கலபொடஅத்தே ஞானசேர தேரர் தெரிவித்துள்ளார்

கினிகத்தேன விகாரை ஒன்றுக்கு வருகை தந்து கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த தேரர் கூறியதாவது

50 ற்கும் மேற்பட்ட விகாரைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளவிருப்பதாக எமக்கு 2010ம் ஆண்டு தகவல் வந்தது அந்த காலபகுதியில் அனைத்து இடங்களுக்கு நாம் தகவல் வழங்கினோம் .இது போன்ற குண்டுதாக்குதலின் முலமாக எமது சமுகம் எமது எதிர்கால சந்ததியினரின் எதிர்காலம் இல்லாமல் போய்விடும் ஆகையால் தான் எமது மக்களை நாம் விகாரைகளுக்கு அழைத்து தெளிவுபடுத்துகிறோம் .நாங்கள்
மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் எவராலும் கேள்வி எழுப்பமுடியாது

எமக்கு தற்பொழுது அபிவிருத்தி என்பது முக்கியம் ஆகையால் நாம் பொதுபலசேனாவை பலபடுத்த வேண்டும். முஸ்லிம் மதத்தலைவர்கள் முஸ்லிம் மக்களை பள்ளிவாசல்களுக்கு ஒவ்வரு வெள்ளிக்கிழமையும் அழைத்துஅரசியல் தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்வார்களானால் அதே ஏன் எம்மால் முடியாது – எனவும் அவர் குறிப்பிட்டார்

பொகவந்தலாவ நிருபர்.எஸ்.சதீஸ் 

8 comments:

  1. Meyata pissu wedi wela.... ikmenda angoda hospital ta arang giyoth wetharai beranda pluwan

    ReplyDelete
  2. இலங்கையில் எந்த ஒரு முஸ்லிம் பள்ளிவாயல்களிலும் அரசியல் பேசப்படுவதில்லை.எல்லாப் பொய்களையும் கூறிமக்களை வழிகெடுப்பதுபோல் இந்த பொய்யை இவனால் ஒருபோதும் நிறுவமுடியாது.ஏனெனில் அது உண்மைக்குப் புறம்பானது. எழுவதோ அதற்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் இருப்பது உண்மையாக இருந்தால் அவர்களை நாட்டின் நீதித்துறைக்கு அறிவித்து அவர்களைக் கைப்பற்றி நாட்டை சமாதானமாக ஆக்க மாத்திரம் ஒத்துழைப்பு வழங்கு. பொய்யையும் புரட்டையும பரப்பி பொதுமக்களைக் குறிப்பாக முஸ்லிம்களை இக்கட்டான நிலைமைக்குத் தள்ளாதே.

    ReplyDelete
  3. இவர் ஒரு குழப்பவாதியே தவிர இல்லை!
    யாருடையவோ நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நச்சு விதைகளை விதைப்பார்!

    ReplyDelete
  4. அந்த 70 பேரையும் உங்களுக்கு தெரியுமானால் ஏன் அவர்கள் இருக்குமிடத்தை காட்டிக் கொடுக்க முடியாது?

    ReplyDelete
  5. Including yourself????????

    ReplyDelete
  6. இவருக்கு முதலில் புத்த சாசனம் படிப்பக்கணும் ஒன்னும் தெரியாத இவரின் கருத்துக்களை கேட்கும் மக்கள் எவ்வளவு முட்டாளாக இருக்கணும்... ஆனால் யாரும் இவரின் கருத்துக்களை கணக்கிலெடுப்பதில்லை என்பதே நிதர்சனம்.

    ReplyDelete
  7. ஏன் அப்பனே ஞானசாரர் அவரகளே! வெள்ளிக்கிழமைகளில் இஸ்லாமிய உலமாக்கள் இஸ்லாமிய மக்களை மஸ்ஜிதுக்கு அழைத்து நற்சிந்தனைகள் வழங்குகின்றனர். அது மாதிரி நீங்களும் செய்ங்க. மக்களைத் திருத்தப் பாருங்க அப்பனே. யார் வேணாம்னாங்க. உங்கட பௌத்த துறவிகளில் ஆயிரம் பேரை தேர்வு செய்து இவ்விரண்டு பேரா 500 இஸ்லாமிய மஸ்ஜிதுகளுக்கு அனுப்பி வெள்ளிக்கிழமைகளில் அங்க என்ன நடக்குதுன்னு பாருங்க. அப்பிடிப் போறவங்க பௌத்தராகத் திரும்பி வந்தா அது ஒங்கட அதிஷ்டம். இல்லாட்டி எங்களைக் குறை சொல்லக்கூடாது.

    ReplyDelete

Powered by Blogger.