38 வருடங்களின் பின், மீண்டும் A/L பரீட்சைக்கு தோற்றிய ரஞ்சன்
பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்றையதினம் 05.08.2019 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பிரதேசத்திலுள்ள ஆனந்த பாலிகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள, பரீட்சை மத்திய நிலையத்தில் அவர் பரீட்சை எழுதியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்றையதினம் ஆரம்பமாகியிருந்தன.
நாடளாவிய ரீதியிலுள்ள இரண்டாயிரத்து 678 பரீட்சை மத்திய நிலையங்களில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கல்விக்கும்,திறமைக்கும் வயது ஒரு தடையில்லை.வாழ்த்துக்கள் திரு.ரஞ்ஞன் அவர்களே
ReplyDeleteVery good later some one will not tell you are not pass even AL
ReplyDeleteஇவ்வளவு நாளும் A/L எழுதாமலா பாராளுமன்றத்திற்குள் இருந்தான்????
ReplyDelete