Header Ads



ஹக்கீமுடைய அமைச்சரவை பத்திரம் பற்றி, எனக்கு எதுவும் தெரியாது - ஹரீஸ்

- ஷம்ஸ் பாஹிம்-

கல்முனை, தோப்பூர் மற்றும் வாழைச்சேனை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரையில் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் அமைச்சு பதவிகளை ஏற்கப் போவதில்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  

இந்த விவகாரம் தொடர்பில் நேற்று முன்தினம் (29) இரவு கல்முனையில் கூட்டமொன்று இடம்பெற்றதோடு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு அமைச்சு பொறுப்புக்களை ஏற்க கூடாது என தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்,

கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் அமைச்சர் வஜிர அபேவர்தனவுடன் சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறினார். கல்முனை, தோப்பூர், வாழைச்சேனை பிரதேச செயலகம் தொடர்பில் இறுதித் தீர்வு காணப்பட வேண்டும். திகன, மினுவாங்கொட, குருநாகல் பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவது போன்று விடயங்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் பட்சத்திலே அமைச்சுப் பதவிகளை ஏற்போம் எனவும் குறிப்பிட்டார்.

கல்முனை விவகாரம் தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சரவை பத்திரமொன்றை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படும் விடயம் குறித்து வினவியதற்கு பதிலளித்த அவர் அது பற்றித் தனக்கு எதுவும் தெரியாது எனவும் கூறினார்.


1 comment:

  1. அன்புகுரிய தலைவர் ஹரீஸ் அவர்கள் கவனத்துக்கு, வடகிழக்கு சம்பந்தபட்ட தமிழ் முஸ்லிம் இனப்பிரச்சினைகளில் அரசை அணுக முன்னம் முஸ்லிம் தலைமையும் கூட்டமைப்பும் எடுத்தும் கொடுத்தும் ஒரு இணக்கபாட்டுக்கு வருவதுதான் கேடற்ற சிறந்த அணுகுமுறையாகும். ஏனைய எல்லா வழிகளும் எதிர்காலத்தில் கிழக்கில் குறிப்பாக தமிழ் முஸ்லிம் ஒற்றுமையீனத்தால் ஏற்கனவ சிங்கள் மாவட்டச் செயலாளர்கள் நிர்வாகம் செய்யும் திருமலை அம்பாறை மாவட்டங்களில் அரசியல் ரீதியாகவும் சிங்கள தலைமை ஏற்படவே வழிவகுக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.