Header Ads



முஸ்லிம்களிடம் இருந்து தமிழர்கள், ஆக்கிரமித்துள்ள காணிகளை திருப்பித்தர வேண்டும் - விக்னேஸ்வரனுக்கு இது புரியுமா..?

முகவரியற்றிருந்த முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் ஐயாவுக்கு அரசியல் முகவரி கொடுத்து வட மாகாணத்தின் முதலமைச்சராக்கி அழகு பார்த்த தமிழ் கூட்டமைப்புக்கு துரோகம் செய்து கூட்டமைப்பை விட்டு வெளியேறி தனது அந்திம காலத்தில் இனவாதக்கருத்துக்களை பரப்பி வரும் சீ.வி.விக்னேஸ்வரனின் இனவாதக் கருத்துகளை கண்டிக்க வேண்டிய கடமை எல்லோருக்கும் உண்டு என கோறளைப்பற்று ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.ஹாமித் மௌலவி தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் 16வது சபை அமர்வு சபை சபா மண்டபத்தில் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் இடம் பெற்றபோது அதில் உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது,

அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதந்த முன்னாள் முதலமைச்சர் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் ஒன்பதாயிரம் தமிழ்ப்பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாகவும் முன்னூறு தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டதாகவும் இன்வாதக்கருத்துகளை முன்வைத்திருந்தார்.

அவரின் கருத்துக்கு பலத்த கண்டங்கள் பரவலாக எழுந்துள்ள நிலையில் அவர் குறிப்பிட்ட பிரதேசத்தின் மக்கள் மன்றம் என்ற வகையில் அவரின் அந்த இனவாதக்கருத்துக்களுக்கு பலத்த கண்டனத்தை தெரிவிக்க வேண்டிய கடப்பாடு நம் எல்லோருக்கும் உள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் அரசியல் அறிமுகம் பெற்ற அவர், கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனக்கான அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள ஒரு சில இனவாதிகளுடன் சேர்ந்து கொண்டு முஸ்லிம் சமூகத்திற்கெதிரான  இவ்வாறான கருத்துக்களை வெளியிட தொடங்கியுள்ளார்.
ஒன்பதாயிரம் தமிழ்ப்பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாகவும், முன்னூறு தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டதாகவும் அவர் முன்வைத்துள்ள வன்மமான கருத்துக்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

புலிப்பயங்கரவாதம் இருந்த கடந்த முப்பதாண்டு காலப்பகுதியில் முஸ்லிம் சமூகம் வட கிழக்கில் பாரிய இழப்புகளைச் சந்தித்துள்ளோம்.தொண்ணூறுகளில் மொத்த பொருளாதாரமும் பழிக்கப்பட்டு வடக்கிலிருந்து துரத்தியடிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை சொந்த கிராமங்களில் மீள்குடியேறாத நிலையிலும் அல்லல்படுகின்றனர்.

அதே நேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இனவாதம் பேசும் எந்தவொரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் பிரதேச அபிவிருத்திகளுக்கு ஒரு ரூபாவேனும் ஒதுக்கீடு செய்யாத நிலையில் இம்மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் இந்து கோயில்கள், பன்சாலைகள், கிறிஸ்தவ ஆலயங்களின் அபிவிருத்திக்கு ஒதுக்கீடுகளை அள்ளிக் கொடுக்கும் இன்றைய சூழலில் இவ்வாறான ஈனத்தனமான இனவாதக் கருத்துக்களை வெளியிட்டுள்ளமை மிகவும் அபாண்டமான கேவலமான செயலாகும்.

இவரது கருத்துக்களுக்கு மாற்றமாக எண்பத்தைந்துகளிலிருந்து இன்றுவரை முஸ்லிம்கள் வாழ்ந்த பூர்வீகக் காணிகள், வயல் நிலங்கள் அபகரிக்கப்பட்டு தமிழர்கள் ஆக்கிரமித்துள்ளார்கள் என்ற செய்தி ஏன் அவருக்கு புரியாமல் போனதோ தெரியாது.

பனம்பலன ஆணைக்குழுவினால் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு சுமார் 240 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு வழங்குவதற்கு சிபார்சு செய்யப்பட்டும் இன்றுவரை அதனை வழங்குவதற்கு தமிழர் தரப்பு முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா தேர்தல் தொகுதியில் காணப்படும் முஸ்லிம்களின் பூர்வீகக்கிராமமான குஞ்சான்குளம், பனிச்சங்கேணி, உசன்டஏற்றம், கிருமிச்சை, முறாக்கை, கள்ளிச்சை, ஜப்பார்திடல், காரமுனை, மதுரங்குளம், பொத்தானை, பொத்தானை அணைக்கட்டு, வாழைச்சேனை சங்கத்து கொளனி - தற்போது வாழைச்சேனை பிரதேச செயலகமும் சமுர்த்தி காரியாலயமும் அமைந்துள்ள பிரதேசத்தை உள்ளடக்கிய கிராமம் இங்கு ஒரு பள்ளிவாயலும் அமைந்திருந்தது இது போன்ற முஸ்லிம்களின் பூர்வீகக்காணிகள் தமிழ் அரசியல் தரப்பின் ஒத்துழைப்புடன் ஒட்டு மொத்தமாக தமிழர்களால் அபகரிக்கப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று மத்திக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாவலடி முதல் ரெதிதென்ன வரையான முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டிய காணிகள் இதுவரை வழங்கப்படவில்லை. இவைக்களுக்கு முட்டுக்கட்டையாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்.

இவ்வாறாக முஸ்லிம்களின் பூர்வீக நிலபுலங்கள் தமிழர் தரப்பினால் கையகப்படுத்தப்பட்டு கபளீகரம் செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழர் தரப்பிலுள்ள இனவாத அரசியல்வாதிகள் முஸ்லிம்கள் தமிழர் காணிகளை அபகரித்து விட்டதாகவும் முஸ்லிம்கள் அநீதி இழைத்து விட்டதாகவும் பேசுவது எமக்கு மிகவும் வேதனையளிக்கின்ற விடயமாகும்.

எமது அரசியல் தலைமைகள் இது விடயத்திலே துணிந்து பேச வேண்டும். இதற்கான தீர்வுகளை, இழந்து போயுள்ள காணிகளையும் கிராமங்களையும் மீளப் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதேநேரம் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் விக்னேஸ்வரன் ஐயா முஸ்லிம் சமூகத்தின் மீது முன்வைத்த இந்த குற்றச்சாட்டை வன்மையாக கண்டிக்கிறேன் என கோறளைப்பற்று ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.ஹாமித் மௌலவி மேலும் தெரிவித்தார்.

4 comments:

  1. நாங்கள் முஸ்லிம் மக்கள் சார்பாக மட்டுமல்ல முழு இலங்கை தமிழ்பேசும் மக்கள் சார்பாகவும் சம்பந்தர் ஐயாவுக்கு மிக முக்கியமான கோரிக்கை ஒன்றினை முன்வைக்க விரும்புகின்றோம். (சேர் இது ஜோக் அல்ல) தமிழ் மக்களுடனும் வடக்கு கிழக்கு மாகாணத்தவருடனும் எந்தவித தொடர்புமற்று இன்னும் பல தமிழ் மக்கள் வேலைவெட்டி இல்லாமல் சும்மா வெட்டியாக தென் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களையும் எங்களுடைய வடக்கு கிழக்குப் பிரதேசங்களுக்கு அழைத்துவந்து அரசியல் பொறுப்புள்ள பெரும் பதவிகளை அள்ளி அள்ளி வழங்குமாறு மிகவும் தாழ்மையாக கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம். மற்றும் “எட்டப்பன்” என்ற பெயர்தாங்கி ஒருவரை நாங்கள் வரலாற்றில்தான் சந்தித்துள்ளோம். உண்மையில் அவர் எப்படிப்பட்ட உருவத்தில் இருப்பார் என்பதனை தற்கால சமூகங்களுக்குத் விக்கினேஸ்வரன் மாத்தையா மூலம் அழகுறத் தெளிவாகக் காட்டித்தந்தமைக்கு எமது அளப்பெரிய நன்றிகளை சம்பந்தர் சேர் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

    ReplyDelete
  2. யாா் யாரெல்லாம் கருத்துச் சொல்வதென்று விவஸ்தையில்லாமல் போயிற்று. அவா் ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி, ஒரு பொியமனிதனைப் பாா்த்து யாரும் அறிக்கை விட்டால் அவா்களும் பொியவா்களாகி விடலாம் என தப்புக்கணக்குப் போட்டுவிட்டனா்.

    ReplyDelete
  3. Muslim களிடம் ஆயுத முனையில் கொள்ளை அடித்த கும்பல்,தற்போது மறைமுக கொள்ளயில் ஈடுபட முனைகிறது.Muslim தரப்பு இனி உசாராக வேண்டும்.புலிகள் ஆயுத முனையில் எம்மிடம் கொள்ளையிட்டதை தற்போது தமிழர்களிடம் உள்ளது.அதை மீளப் பெற நாமும் இனி நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

    ReplyDelete
  4. Sellnewlk.
    He is not a judge. He went through backdoor. He bribed to get in to Judaical job. In fact, he is a subhuman and has Zero knowledge.

    ReplyDelete

Powered by Blogger.