Header Ads



இலங்கையின் கடவுச்சீட்டை பெற்றுவிட்டேன்

அமெரிக்க கடவுச்சீட்டு ரத்துச் செய்யப்பட்ட பின்னர், இலங்கையில் புதிய கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

அமெரிக்க குடியுரிமையைத் தான் கடந்த ஏப்ரல் மாதமே துறந்து விட்டேன். இதில் எந்த பிரச்சினையுமின்றி, குடியுரிமை துறப்பு செயல்முறைகள் நிறைவடைந்து விட்டன. அதில் எந்த சிக்கல்களும் இருக்கவில்லை.

எனது அமெரிக்க கடவுச்சீட்டு ரத்துச் செய்யப்பட்ட பின்னர், இலங்கையின் புதிய கடவுச்சீட்டைப் பெற்றிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. Anyone can get SL passport if you bribe someone at the Immigration department.

    ReplyDelete
  2. Beware of this man who is a liar, liar, liar nothing but liar.But USA appearently is paving the way to get this man selected in the Presidential election, as an American spy, in the name of computer trainer is already in the Election Commission is arranging a computer jilmart. Now the Presidential election is completely run by USA. God only knows what will happen to this home land.

    ReplyDelete

Powered by Blogger.