Header Ads



அனைவரும் கவனமாக, இருக்குமாறு கூறிக்கொள்கிறேன் - அசாத் சாலி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேவையேற்பட்டால், சிறுபான்மை பிரதிநிதி ஒருவரை வேட்பாளராக நிறுத்த முடியும் என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் மீது சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அத்துரலியே ரதன தேரர், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

பொதுஜன பெரமுனவுடன் இணைந்து ''ரணில் விக்ரமசிங்கவும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் எனது ஆட்டத்தை காட்டுவேன்'' என அவர் கூற வேண்டும்.

நான் மகிந்த ராஜபக்சவிடம் செல்வேன் என்று சொல்ல வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து விட்டு அத்துரலியே ரதன தேரர் இதனை செய்திருந்தால், அவருக்கு மரியாதை கொடுக்கலாம். அவர் படகில் இருந்து மொட்டுக்கட்சிக்கு தாவி விட்டார் என்பது முழு நாட்டுக்கும் தெரியவந்துள்ளது.

அவருக்கு மொட்டுக்கட்சியில் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு அல்லது தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி உறுதியாக கிடைக்கும்.

மருத்துவர் ஷாபி மீது எந்த குற்றமும் இல்லை என குற்றப்புலனாய்வு திணைக்களமும் சட்டமா அதிபர் திணைக்களமும் விடுதலை செய்ய முயற்சிக்கும் போது, ரதன தேரர், கொழும்பில் இருந்து சட்டத்தரணிகளை அழைத்துச் சென்று போராடுகிறார்.

தற்போது கட்சிகள் தமது வேட்பாளர்களை தெரிவு செய்ய முடியாமல் தவிக்கின்றன. மொட்டுக்கட்சியில் உள்ள சிறியவர்கள் ஊடக சந்திப்புகளை நடத்தி, நாங்கள் வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன நிறுத்தப்படுவதை விரும்பவில்லை, அவருக்கு வேட்பு மனுவை வழங்க மாட்டோம் என்று கூறுகின்றனர்.

இரண்டு கட்சிகளும் பேச்சுவார்த்தை ஆரம்பித்த போது, இது சரிப்பட்டு வராது என்று நான் கூறினேன்.

மைத்திரிபால சிறிசேனவுக்கு மொட்டுக்கட்சியுடன் இணைந்து செயற்பட முடியாது, அதில் உள்ளவர்கள் திருடர்கள், 8 அடிப்படைவாதிகள் குண்டு தாக்குதலை நடத்தினார்கள் என்பதற்காக முழு முஸ்லிம் சமூகமும் அடிப்படைவாதிகளா?.

நாங்களும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேலை செய்வோம். நாட்டில் 30 வீதம் சிறுபான்மையினர் உள்ளனர் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் இணைந்து வேட்பாளரை நிறுத்த முடியும். இன்று இந்த எதிர்வை கூறுகிறேன். அனைவரும் கவனமாக இருக்குமாறு கூறிக்கொள்கிறேன்.

No comments

Powered by Blogger.