Header Ads



அபாயா விடயத்தில் எவ்வித விட்டுக்கொடுப்பும் இல்லை, புத்தளம் முஸ்லிம்கள் தீர்மானம் நிறைவேற்றினர்


புத்தளம் மாவட்டத்தில், பிரதேச செயலகங்கள் மற்றும் ஏனைய அரச திணைக்களங்களில் முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடும் 2ம் கட்ட செயலமர்வு இன்று(23) புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் தலைமையில் இடம்பெற்றது.

ஏலவே இம்மாதம் 09ம் திகதி சுமார் 15 சட்டத்தரனிகளை ஒன்றிணைத்து நடாத்தப்பட்ட முதல் கட்ட செயலமர்வில் அரச திணைக்களங்களில் முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் குறிப்பாக அபாயா தொடர்பான பிரச்சினை தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு, சட்டத்தரனிகளால் பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இச்செயலமர்வு முதல் கட்டமாக குழுநிலை கலந்துரையாடலாக பழைய நகர மண்டபத்திலும் பின்னர் அதற்கான தீர்வுகளை வழங்கும் கூட்டம் புதிய நகர மண்டபத்திலும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ், புத்தளத்தின் மூத்த சட்டத்தரனிகளான காதர், இக்பால் உட்பட சட்டத்தரனிகளான கமர்தீன், சம்சுர் ராபி, ஹிஸ்மி, ரம்சான் மற்றும் நகர சபை உறுப்பினர்கள், வர்த்தக சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.

இதன்படி முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா விடயத்தில் எவ்வித விட்டுக்கொடுப்பும் இல்லையென்றும், தேவையேற்படின் நீதிமன்றம் செல்லவும் தயார் என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

Mohamed Riyas

No comments

Powered by Blogger.