Header Ads



பதற்றம் ஏற்படலாம் - ஹெல உறுமய ஜனாதிபதிக்கு அறிவிப்பு

மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை இல்லாமல் செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி கோரியுள்ளது.

அவ்வமைப்பு விடுத்துள்ள விசேட அறிவித்தல் ஒன்றிலேயே இதனைக் கூறியுள்ளது.

அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் மற்றும் ஆளுநர்களான அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவி நீக்க வேண்டும் என நாடு முழுவதும் மக்கள் கருத்தொன்று உருவாகியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய தேரரின் உண்ணாவிரதப் போராட்டமும் இதன் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலைமை தொடர்ந்தும் நிலவும் வரை பார்த்திருந்தால், கண்டியில் மாத்திரமன்றி, நாடு முழுவதும் உண்ணாவிரதம் என்றும், எதிர்ப்புப் போராட்டங்கள் என்றும் ஆரம்பிக்கப்பட்டு, சமூகத்தில் நிலவும் சமாதான சூழ்நிலை இல்லாமல் போக வழியேற்படும் எனவும் ஜாதிக ஹெல உறுமய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால், ஜனாதிபதி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆளுநர்கள் தொடர்பிலும், அமைச்சர் குறித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

No comments

Powered by Blogger.