Header Ads



அப்பாவி முஸ்லிமை விடுவித்த நீதிமன்றம் - விபச்சார ஊடகங்கள் என கத்திய மருமகன்

“IS பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பான CD களை வைத்திருந்த கொழும்பு துறைமுக அதிகார சபையின் ஊழியரான மொஹமட் நுஃமான் மொஹமட் நஷ்ரீ எனும் பயங்கரவாத சந்தேக நபர் துறைமுக அதிகார சபை பொலிசாரினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.”

என்ற செய்தியோடு ஒரு வாட்டசாட்டமான வயதான ஒரு நபரை வேனிலிருந்து இறக்கி நீதிமன்றைத்தை நோக்கி கூட்டிவரும்போது அவர் ஊடகங்களின் கெமராக்களைக்கண்டு தனது கையினால் வாயைப்பொத்தி தனது முகத்தை முடியுமான வகையில் மறைத்துக்கொண்டு நீதிமன்றினுள் நுழைந்ததை ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு காட்டின.

நாம், இப்படியான அதி பாதுகாப்பான பிரதேசத்தில் இப்படி ஒரு பயங்கரவாதி இருந்திருப்பதை ஏன் இந்த பாதுகாப்புத்துறை பார்த்துக்கொண்டிருந்தது என ஆச்சரியப்பட்டோம்.

(நீதிமன்றில்)

பொலிசார்:- இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் நடவடிக்கைகளைக்கொண்ட CD களையும்,10 இலட்சம் பெறுமதியான இரு காசோலைகளையும் தவ்ஹீத் ஜமாஅத் தின் ரிக்கட் புத்தகத்தையும் வைத்திருந்த இந்த சந்தேக நபர் தனது வங்கிக்கணக்குகளூடாக பாரிய ஒரு தொகையை பயங்கரவாத செயற்பாட்டுக்காக பெற்றிருக்கிறார் என்ற சந்தேகமிருப்பதால் இவரை 30 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி தாருங்கள்.”

சத்தியம்(உண்மை)எது?

எமது சட்டத்தரணி :- “குறிப்பிட்ட சந்தேக நபர் ஹப்புகஷ்தலாவையைச்சேர்ந்தவர்.கொழும்பு துறைமுகத்தில் 20 வருடங்கள் வேலை செய்து வருவதால் கொழும்பில் அவரும் அவரது மகனும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர்.

இவரின் மகன் ஒருவர் வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணம் தான் வங்கியில் வைப்பாக இருக்கிறது, அதில் ஒரு 10 இலட்சம் ஒரு வியாபாரத்தில் முதலீடு செய்து இருக்கிறார் அதற்கு உத்தரவாதமாக ஒருவரால் வழங்கப்பட்டது தான் அந்த இரு காசோலைகளும் ,

இவர் எந்தவித பயங்கரவாத அமைப்புக்களுடனும் தொடர்புபட்டவரல்ல ஆனால் SLTJயின் பள்ளிக்கு தொழப்போவார். குறிப்பிட்ட SLTJ அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல அது கலாச்சார அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதவான்:-(வழமையாக சொல்வது போல)”விசாரணையை விரைவுபடுத்துங்கள்அறிக்கையை கூடிய சீக்கிரம் சமர்ப்பியுங்கள்”.

எமது சட்டத்தரணி பல சட்டநுணுக்கங்களை வாதங்களையும் முற்போட்டு (தொழில் இரகசியங்கள் என்பதால் வெளிப்படையாக கூறமுடியாது)சட்டம் ஒரு இருட்டறையல்ல என்பதை விளங்கப்படுத்தியே வந்துள்ளார்
.
50 நாட்களின் பின்னர்,கடைசியாக சென்ற 20/06/2019ல் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பொலிசார்:-“குறிப்பிட்ட சந்தேக நபர் தொடர்பாக இதுவரையில் விசாரித்ததில் இவர் எந்த வித பயங்கரவாத அமைப்புக்களுடனும் சம்பந்தப்படவில்லை மேலும் இவருடைய வங்கிக்கணக்குகளிலும் சந்தேகப்படும்படியான எந்தவித வெளிநாட்டு வைப்புக்களும் இல்லை எனவே இவரை பிணையில் விடுதலை செய்வதில் எமக்கு எந்தவித ஆட்சேபனையுமில்லை.”

எமது சட்டத்தரணி:-பொலிசாரின் இந்த செயற்பாட்டினால் சந்தேக நபரை வேலையிலிருந்து துறைமுக அதிகாரசபை நீக்கிவிட்டது(அதற்கான கடிதம் நீதவானின் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது).

நீதவான் L.அவேகுணவர்ந்தன சந்தேக நபருக்கெதிராக குற்றங்களை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால் சந்தேக நபரை மீண்டும் வேலையில் அமர்த்துவதற்கான சிபார்சுக்கடிதத்தை வழங்குவதற்கான கட்டளையை ஆக்கியதுடன் சந்தேக நபரை பிணையில் விடுதலையும் செய்து வழக்கை எதிர்வரும் 1/7/2019க்கு ஒத்திவைத்தார்.

கொழும்பு துறைமுக அதிகாரசபை மீண்டும் இந்த அப்பாவிக்கு வேலையை கொடுக்க மறுத்தால் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை (FR) வழக்கொன்றை இன்ஷா அல்லாஹ் தாக்கல் செய்யவிருக்கிறோம்.

பிணையில் விடுதலை செய்யப்பட்ட அப்பாவியான முஸ்லிம் சகோதரனை அழைத்துக்கொண்டு நீதிமன்றத்தை விட்டு வெளியேறும் போது அவரின் மருமகன் தலை குனிந்து கொண்டிருந்த கெமராக்களையும் ஊடகவியளாளர்களையும் பார்த்து “நடு ரோட்டில இருந்து நல்லா ஊடக விபச்சாரம் செய்யுங்க” என்ற வார்த்தைப்பிரயோகத்தை பாவித்தார்.

ஆனால் ஊடகவியலாளர்கள் எல்லோரும் எறுமை மாட்டின் மேல் மழை பேய்ந்தது போல் நின்று கொண்டிருந்தனர்.காரணம் உண்மையான செய்திகள் பரபரப்பானதாக இல்லை என்பதற்காகவே!

சட்டத்தரணி சறூக் -0771884448

2 comments:

  1. Can't you prosecute against the policemen who held him 50 days in the supreme court??

    ReplyDelete

Powered by Blogger.