Header Ads



ஜம்மியத்துல் உலமாவின், அடுத்த தலைவர் யார்...???


- ஏ.ஏ. மொஹமட் அன்சிர் -

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவிற்கான, புதிய நிர்வாகிகள் தெரிவு எதிர்வரும் ஜுலை மாதம், 14 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை தெஹிவளை 
ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில்அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் புதிய தலைவராக, செயலாளராக யார் வருவார்கள் என்ற ஆர்வம் முஸ்லிம் சமுதாயத்திடையே மேலாங்கியுள்ளது.

அந்தவகையில் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு, ஜம்மியத்துல் உலமாவின் முக்கிய பதவியை வகிக்கும் மூத்த உலமா ஒருவர் மூலமாக, கிடைக்கப்பெற்ற தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.

ஜம்மியத்துல் உலமாவின் அடுத்த தலைவராவதற்கான முதல் 3 பேர்களில் அப்துல் ஹாலிக் மௌலவி, யூசுப் முப்தி மற்றும் அகார் முஹம்மது ஆகியோர் காணப்படுகின்றனர்.

இவர்களில் ஒருவருக்கே ஜம்மியத்துல் உலமாவின் தலைவராவதற்கான வாய்ப்பு இன்ஷா அல்லாஹ் உள்ளது.


14 comments:

  1. Rizvi mufthi insha allah

    ReplyDelete
  2. வேற்றுமைகளில் ஒரு ஒற்றுமையை மேட்கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் சிறப்பாகவும் ,வினைத்திறனோடும் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் அவர்களின் செயட்பாடுகளை அவதானிக்க கூடியதாகவுள்ளது .எனவே தற்போதைய காலகட்டத்தில் இவர் போன்றவர்களின் தலைமைத்துவம் பொருத்தமாக அமைய முடியும் .

    ReplyDelete
  3. Insha allah with help and assistanse of almighty allah, to select very suitable leader for the institution and guide Sri Lankan muslim in correct path
    may allah bless all ulamas and religious leaders for success

    ReplyDelete
  4. வீணாப்போன அரசியல் கட்சிபோல் அதில் ஒட்டிக்கொண்டிருப்பவர்களுக்குத் தான் பதவிகளும் அதிகாரங்களும் மாறி மாறி பகிர்வதானால் அதன் இத்துப்போன திட்டங்களும், இயக்கம் சார்ந்த தீர்மானங்களும் நிச்சியம் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு நன்மை பயக்காது. சமூகத்தில் துறைசார்ந்த நிபுணர்கள், ஆற்றலும் தகுதியும் உள்ளவர்கள் சமூகத்தில் காணப்படுகின்றனர். அவர்களைத்தேடி தகுதியானவர்களுக்கு பதவியை வழங்குங்கள். அப்போது நிச்சியம் அவர் இந்த சமூகத்துக்கும் நாட்டுக்கும் இந்த நாட்டின் சகல மக்களுக்கும் பயன்படப்போதுமானவர்.

    ReplyDelete
  5. ஜ‌ம்மிய்ய‌துல் உல‌மா ச‌பையின் புதிய‌ நிர்வாக‌ம் தெரிவு செய்ய‌ப்ப‌ட‌விருப்ப‌தாக‌ அறிய‌ முடிகிற‌து. அத்துட‌ன் ப‌ல‌ த‌சாப்த‌மாக‌ த‌லைவ‌ராக‌ இருக்கும் ம‌திப்புக்குரிய‌ ரிஸ்வி முப்தி இனி த‌லைமை வ‌கிக்க‌ப்போவ‌தில்லை என‌ கூறியுள்ள‌தாக‌ ஊட‌க‌ங்க‌ள் தெரிவிக்கின்ற‌ன‌.

    க‌ட‌ந்த‌ 15 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மாவின் தெரிவு என்ப‌து நாட்டிலுள்ள‌ ஜ‌ம்மிய்யாவின் அங்க‌த்துவ‌ம் பெற்ற‌ அனைத்து உல‌மாக்க‌ளையும் அழைத்தே தெரிவு ந‌ட‌க்கும். ஆனால் அண்மைக்கால‌மாக‌ இவ்வாறு அனைவ‌ரையும் அழைத்து நிர்வாகிக‌ள் தெரிவு செய்ய‌ப்ப‌டுவ‌தில்லை. மாறாக‌ ஒவ்வொரு கிளைக‌ளின் த‌லைவ‌ர், செய‌லாள‌ர், உப‌ த‌லைவ‌ர்க‌ள் இருவ‌ர் ம‌ட்டுமே அழைக்க‌ப்ப‌ட்டு தெரிவு செய்ய‌ப்ப‌டும் புதிய‌ முறையை காண்கிறோம். இது தெரிவுச்சுத‌ந்திர‌த்துக்கு மாற்ற‌மான‌ ந‌டை முறையாகும்.

    எம்மை பொறுத்த‌வ‌ரை உல‌மா ச‌பைக்கு த‌லைமை தாங்கும் த‌குதியுள்ள‌வ‌ர்க‌ள் குக்கிராம‌த்திலும் உண்டு.

    ஆக‌வே ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மாவின் நிர்வாக‌ தெரிவுக்கு பின் வ‌ரும் ஆலோச‌னைக‌ளை உல‌மா க‌ட்சி முன் வைக்கிற‌து.
    1. நிர்வாக‌த்தின் அனைத்து ப‌த‌விக‌ளிலும் ப‌தவி பெற‌ விரும்பும் ப‌திவு பெற்ற‌ உல‌மா அங்க‌த்த‌வ‌ர்க‌ள் விண்ண‌ப்பிக்க‌ முடியும் என்ப‌தை ஊட‌க‌ங்க‌ள் வாயிலாக‌ அறிவிக்க‌ வேண்டும்.
    2. அவ‌ருக்குரிய‌ நிப‌ந்த‌னை என்ப‌து ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மாவின் அங்க‌த்த‌வ‌ராக‌வும் 40 வ‌ய‌துக்கு மேற்பட்ட‌வ‌ராக‌வும் அர‌பு, த‌மிழ், சிங்க‌ள‌ம் ஆகிய‌ மொழிக‌ளில் பேசும் ஆற்ற‌ல் உள்ள‌வ‌ராக‌ இருக்க‌ வேண்டும் என்ற‌ நிப‌ந்த‌னை ம‌ட்டும் போதுமான‌து.
    3. பொதுக்கூட்ட‌த்தில் ப‌த‌விக்கு விண்ண‌ப்பித்தோரின் பெய‌ர்க‌ளை அச்சிட்டு வாக்கு சீட்டுக‌ள் போல் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டு க‌ல‌ந்து கொண்டிருப்போரால் தெரிவு செய்ய‌ப்ப‌ட‌ வேண்டும். இது விட‌ய‌த்தில் முஸ்லிம் மீடியா போர‌த்தின் த‌லைவ‌ர் என் எம் அமீனிட‌ம் ஆலோச‌னை பெற‌லாம். ஆனால் அந்த‌ மீடியா போர‌த்தின் நிர்வாக‌த்தெரிவுக்குரிய‌ நிப‌ந்த‌னைக‌ளை இத‌ற்குள் கொண்டு வ‌ராம‌ல் தெரிவு முறையை ம‌ட்டும் பெற‌லாம். அது சிற‌ந்த‌ தெரிவு முறையாகும்.

    4. இவ்வாறு தெரிவு செய்ய‌ப்ப‌ட்டோர் விப‌ர‌த்தை உட‌ன‌டியாக‌ ச‌பையில் அறிவிக்க‌ வேண்டும்.
    5. ஏற்க‌ன‌வே சில‌ரின் தேவைக்காக‌ தெரிவு முறை என்ப‌து குறிப்பிட்ட‌ சில‌ரை ம‌ட்டும் கொண்டிருக்க‌ வேண்டும் என‌ எழுத‌ப்ப‌ட்டுள்ள‌ யாப்பை இந்த‌ மாத‌மே நிர்வாக‌ம் கூறி நாம் மேற்சொன்ன‌து போன்று தெரிவு இருக்கும் வ‌கையில் மாற்ற‌ வேண்டும்.
    - முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

    ReplyDelete
  6. We make dua to Allah To give us suitable leadership to our umma.

    ReplyDelete
  7. It will define the future of Muslims.

    ReplyDelete
  8. we need once again Assheikh Rizvi Mufthi only

    ReplyDelete
  9. We need to Include in this ACJU group Teachers,Doctors, Engineer, Layers, All intellectual not only Just Mowlavi...

    ReplyDelete
  10. I would like to say it should be a democratic election... all members should be given freedom to vote.. This kind of organisation needs some extra member from wider community. this should include some professionals, academic,and some experts.. or have advisory committee to AJCU.

    ReplyDelete
  11. தகுதியான,சிறந்த பண்புள்ள,சிறந்த ஆளுமையுள்ள,இயக்க சார்பற்ற (இதுவரை இருந்தவர்கள் போலலல்லாது) அல்லாஹ்வை மாத்திரம் திருப்தி படுத்தும் தலைமைத்துவ பண்புள்ள ஒருவர் தெரிவு செய்யப்பட அல்லாஹ்வை பிராத்திக்கிறேன்.

    ReplyDelete
  12. @TrueF இது உலமாக்களுக்கான சபை என்பதை புரிந்து கொள்ளவும் (All Ceylon Jamiyyathul ULAMA).
    வேண்டுமென்றால் புத்திஜீவிகள் சபை ஒன்றை உருவாக்குவது பற்றி சிந்திக்கலாம்.
    Note:for your kind information, I am an Engineer too. NOT A ULAMA

    ReplyDelete

Powered by Blogger.