Header Ads



ஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்

- AAM.Anzir -

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திகதி முதற்தடவையாக சென்றுள்ளனர்.
ஜம்மியத்துல் உலமா தலைவர் முப்தி றிஸ்வி தலைமையில், ஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக சென்ற உலமா சபை பிரதிநிதிகள் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றையும் ஜனாதிபதியின் கரங்களில் நேரடியாக ஒப்படைத்தனர்.

அந்தக்  கடிதத்தில் முஸ்லிம்களின் பாதுகாப்பு, சிறைகளில் உள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்தல், முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் ஆகிய 3 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்தக் கோரிக்கைகளை ஏற்று ஜனாதிபதி உரிய பதிலை வழங்கினால் தாம் இன்று திங்கட்கிழமை மாலை ஜனாதிபதியின் இப்தாரில் பங்குகொள்ள முடியுமென சுட்டிக்காட்டியுள்ளனர்.

தாம் இக்கோரிக்கைகள் பற்றி, சாதகமாக பரிசீலிப்பதாக ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியுள்ளார்.

இதையடுத்து இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இப்தார் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதில் உலமா சபை பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். இதன்போது உலமா சபை தனக்கு அனுப்பிய கடிதத்தையும் ஜனாதிபதி வாசித்துக் காட்டியுள்ளார்.

மேலும் பதில் பொலிஸ்மா அதிபரை உடனடியாக தொடர்புகொண்டு, அப்பாவி முஸ்லிம்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும்படியும், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு முஸ்லிம் பெண்களின் உத்தியோபுர்வ ஆடை விவகாரத்தில் உரிய நடைமுறைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இனவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளவும் வெறுப்புட்டும் பேச்சுக்களை கட்டுப்படுத்தவும் இணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதேவேளை இதுவரை கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள், விடுதலை செய்யப்பட்டதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா -  ஜனாதிபதி சந்திப்பு குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியிருப்பதாக மேலும் அறிய வருகிறது.





17 comments:

  1. ஜானாசாராவை வெளியில் அவர் அனுப்பியதே இவ்வாறான பிரச்சினைகளை உருவாக்கவும் அதனூடாக தனக்கு வாக்கு சேகரிக்கவும்.அப்பாவி ரிக்ஷ்வி முப்தி இது தெரியாமல் அங்கே போயிருக்குரார்.இனியாவது ஒன்ராய் இருப்போம் பிரதேச வாதம்,கட்சி என்பவைகலை மறந்து.அனைத்தையும் சந்தோசமாய் அனுபவித்து விட்டு இப்போது சில தமிழ் தலைமைகள் இன்ரு/நாளை பற்றி அறிக்கை விடுகிறார்கள் இவர்கல்தான் குண்டு வெடிப்புக்கு முன் திருக்கோணமலை பாடசாலயிலும் குண்டு வெடிப்புக்கு பின் புவாக்பிட்டி பாடசலையிலும் எமக்கெதிராக இனவாதத்தை ஆரம்பித்து பின் அதை பிக்குகள் தொடர இடம் கொடுத்தவர்கள்.இப்போது எமது ஒற்றுமையை பார்த்தவுடனும்,பிக்குமாரின் ஆவேசத்தை பார்த்தவுடனும் நாளை பற்றிய எண்ணம் வர,இப்போது எமக்காக முதலைக் கண்ணீர்.தயவு செய்து சில தமிழ் தலைமைகலை நம்ப வேண்டாம்.அவர்களை இனவாதி/கொலைகார,கருனா மற்றும் வியாழேந்திரன் அட்டவனையில் வைத்து கொள்வோம்

    ReplyDelete
  2. ஜானாசாராவை வெளியில் அவர் அனுப்பியதே இவ்வாறான பிரச்சினைகளை உருவாக்கவும் அதனூடாக தனக்கு வாக்கு சேகரிக்கவும்.அப்பாவி ரிக்ஷ்வி முப்தி இது தெரியாமல் அங்கே போயிருக்குரார்.இனியாவது ஒன்ராய் இருப்போம் பிரதேச வாதம்,கட்சி என்பவைகலை மறந்து.அனைத்தையும் சந்தோசமாய் அனுபவித்து விட்டு இப்போது சில தமிழ் தலைமைகள் இன்ரு/நாளை பற்றி அறிக்கை விடுகிறார்கள் இவர்கல்தான் குண்டு வெடிப்புக்கு முன் திருக்கோணமலை பாடசாலயிலும் குண்டு வெடிப்புக்கு பின் புவாக்பிட்டி பாடசலையிலும் எமக்கெதிராக இனவாதத்தை ஆரம்பித்து பின் அதை பிக்குகள் தொடர இடம் கொடுத்தவர்கள்.இப்போது எமது ஒற்றுமையை பார்த்தவுடனும்,பிக்குமாரின் ஆவேசத்தை பார்த்தவுடனும் நாளை பற்றிய எண்ணம் வர,இப்போது எமக்காக முதலைக் கண்ணீர்.தயவு செய்து சில தமிழ் தலைமைகலை நம்ப வேண்டாம்.அவர்களை இனவாதி/கொலைகார,கருனா மற்றும் வியாழேந்திரன் அட்டவனையில் வைத்து கொள்வோம்

    ReplyDelete
  3. Eatkanawe jeneva sendru sahothara inaththukku varalaatru throgam seitha jamiyathululama indru irandavathu thavarai sontha inaththukke seikiraarkal

    ReplyDelete
  4. சிலர் அறியாமையால் றிஸ்வி முப்திக்கு ஏசினர்.

    ReplyDelete
  5. அல்ஹம்துலில்லாஹ்... முயற்சிகளும் நமது துஆக்களும் தொடரட்டும்.

    ReplyDelete
  6. Just a white wash... He will never fulfill those requests... ACJU maintained silent all these days, but as they wanted to take part in the Ifthar, for lies have put forward some requests.....

    ReplyDelete
  7. இந்த நாடகத்தில் கள்வனும் பொலிசும் நீதிபதியும் ஜனாதிபதி அவர்கள்தானே.

    ReplyDelete
  8. TERMINATE
    Terminate This Mufthy and his useless Group.
    We don't need Shameful ACJU.

    Re elect/Select real Islamic Scholars and Intellectuals.
    Unite All Muslims/ Jamaath under One Umbrella /ACJU.

    ReplyDelete
  9. sorry to say . this group does not know any thing about politics and political science. Now,this groups could be easily deceived by Sri Lankan political leaders. All what this group want is to show off with photos.. These people are used like curry leaves. Wait and see what is going to take place now in SL for Muslim community..

    ReplyDelete
  10. Sari Haji marhale, innum, innum Sinhala thalaivarhalayum,Aatchiyalarhalayum nambikkondirathu Mulumaiyaha Allah vukku mattume payanthu thooymayana ullatthunudanum, ithaya sutthiyudanum samoohatthin meetchikku padu padavum
    Malikul mulk in pidi Patti ungalukku theriyum thane.

    ReplyDelete
  11. போங்கடா நீங்களும் உங்க நிபந்தனைகளும்
    சியாக்கள் கொஞ்சம் மற்றும் நீங்கள் இது தான் உங்களது நிலை

    ReplyDelete
  12. முட்டாள்கள் எம்மை ஆள்வார்கள் என்பது சரிதான். ஈமான் உறுதியற்ற உலமாக்கள் நீங்கள் செய்வதை சரிகானவும் சில மடையர்கள் நம்மில் உண்டு

    ReplyDelete
  13. யாருக்கு ஷோ காட்டுறீங்க? நக்க பொய்ட்டுத்தான் பேசவேண்டுமா? அப்ப ொ இதுவரைக்கும் முஸ்லீம்களின் பிரச்சனைகளைப்பற்ற்றிப் நீங்கள் எதுவும் செய்யவில்லையா?

    ReplyDelete
  14. we don't need ulama saba.

    ReplyDelete
  15. இதே போன்று கடந்த வருடமும் குர் பிரதி வழங்கி வைக்கப்பட்டது.

    ReplyDelete
  16. இன்னும் இந்த நாட்டு ஜனாதிபதியை பற்றி அறியாமல் இருப்பது உலமா சபையின் அறிவு கெட்ட தனம்.

    ReplyDelete
  17. இந்த அறிவு கெட்ட கூட்டம் எமக்கு ஒரு சாபம்!

    ReplyDelete

Powered by Blogger.