"குற்றமிழைத்தது முஸ்லிம்கள் அல்ல, ISIS பயங்கவாதிகள்தான் என அடித்துக் கூறுங்கள்"
முஸ்லிம்களை பிரதித்துவப்படுத்தும் தலைவர்களே, பேச்சாளர்களே...!
ஒருவரும் இப்போது ISIS பயங்கவாதம் பற்றி பேசுதைக்கானோம். புர்க்கா, நிகாப், ஹிஜாப், ஷரியா, பொது சட்டம், கலாசாரம், அரபு மத்ரஸா என்று திசை திரும்பி, எல்லோரும் முஸ்லிம் விரோத கருத்துக்களையே முன்வைப்பதை காணக்கூடியதாக உள்ளது.
நாளை இந்த எதிர்ப்பு குர்ஆனில் வந்து நிற்கப்போகிறது.
முஸ்லிம்கள் தமது கலாசாரத்தை பின்பற்றுவதால், முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதால் உங்களுக்கு என்ன நட்டம் என்று துணிந்து கேட்க முஸ்லிம்கள் கூட தயங்குவதேன்.
குற்ற உணர்வுடன், மன்னிப்புக் கோரும் தோரணையில் உரையாடாதீர்கள். குற்றமிழைத்தது நாமல்ல, ISIS பயங்கவாதிகள் என்று உறுதியாகக் கூறுங்கள். பயங்கரவாதிகளை உருவாக்கியோர் பற்றி தெளிவுபடுத்துங்கள்.
பிரதமராக இருந்த பண்டாரநாயக்காவை சோமாராம தேரர் சுட்டுக்கொன்றதற்காக எல்லா பிக்குகளும் காவி உடையை கழட்ட வேண்டும் என்று கூறுவீர்களா என்று திருப்பிக் கேளுங்கள்.
குட்டக் குட்ட குணியாதீர்கள். குணியக் குணிய குட்டுவார்கள் என்பதைத் தான் காண்கின்றோம்.
இந்த நாட்டில் நாம் அடிமைகள் அல்ல.
Thaha Muzammil

Good explanations.
ReplyDeletesuper எங்கள் அதிகமானவர்களின் மரமண்டைக்கு இது புரிவதில்லை
ReplyDeleteபள்ளிவாசல்களின் பிரச்சாரங்களும் விரும்பியவர்கள் எல்லாம் தோற்றுவித்த மதரசாக்களும் தான் இதற்கு பொறுப்பு. அதனைத் தட்டிக்கழிக்க முடியாது. எல்லா முஸ்லிம்களும் பொறுப்பெடுப்பதுடன் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். முஸ்லிம்கள் ஒழுக்கம் கற்றுக்கொள்ள சட்டம் வந்துள்ளது அவ்வளவுதான்.
ReplyDelete