Header Ads



வைத்தியர் ஷாபி விவகாரம், கிணறு வெட்ட பூதம் வெளியான கதை, மாற்றுமத வைத்தியர்களுக்கு நடுக்கம்

வைத்தியர் ஷாபி இன்று VOG level க்கு சித்தரிக்கப்பட்டு குற்றம் சாட்டப்படுகிறார். உண்மையில் மருத்ததுவ துறையில் வைத்தியர் ஷாபியின் நிலை என்ன?  இவர் ஒரு MBBS தரத்தில் உள்ள சாதாரண வைத்தியர்.
குருநாகலை வைத்தியசாலையை பொறுத்தவரை ஒரு VOG க்கு கீழ் 4 வைத்தியர்கள் கடமை புரிவர். இவர்களை SHO (Senior House Officer) என்று அழைப்பர்.
இந்த நால்வரில் ஒருவர்தான் இந்த ஷாபி. இவர்களுக்கு மேலதிகமாக Intern House Officer என இரு வைத்தியர்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை என்ற சுழற்சியில் நியமிக்கப்படுவர்.
இப்போது விடயத்துக்கு வருவோம். வைத்தியர் ஷாபிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்க சொன்ன முதல் நாளே வந்த Complain கள் ஏனைய வைத்தியர்களையும் தூக்கி வாரிப்போட்டது.

#Case 01:-*
அந்த வைத்தியசாலையிலயே கடமை புரிந்ததாக சொல்லும் ஒரு Nurse இன் Complain. தனக்கு வைத்தியர் ஷாபி சிசேரியன் செய்ததாகவும் , சில நாட்களின் பின் தான் நோய் வாய்ப்பட்டு மீண்டும் Ward இல் அனுமதிக்கப் பட்டதாகவும் தன்னை மீண்டும் theatre க்கு எடுத்து தான் அறியாமலேயே தனது கருப்பை அகற்றப்பட்டதாகவும் தனது கைப்பட எழுதிய கடிதத்தை ஒப்படைத்தார். இது Adaderana இலும் காண்பிக்கப்பட்டது.
இப்போ இங்கு பிரச்சினை ஒருவரின் கருப்பை அகற்றும் அளவுக்கு surgery செய்வதாக இருந்தால் அதை தீர்மானிப்பதும் செய்வதும் VOG யே.
இங்கு வைத்தியர் ஷாபிக்கு மெற்பார்வை செய்யும் VOG ஆக இதுவரை இருந்தவர்கள் 
Dr Upali Jayawardena (VOG - Now Retired)
Dr Pathini Sekara (VOG - Now in kurunagala)

#Case 02:-*
செய்த சிசேரியனுக்கு பின் கண்பார்வை இழந்ததாக சொல்லும் பெண்.
இதற்கும் சிசேரியன்க்கும் சம்பந்தம் இல்லை. இதற்கான காரணம் கர்ப்ப காலத்தில் ஏட்படும் pressure அதிகரிப்பான Pre-eclampsia. இது உச்ச கட்டத்தை அடையும்போது கண்பார்வை இழக்கப்படலாம்.
இதனை கண்காணிக்க வேண்டியவர், பொறுப்பு கூற வேண்டியவர் VOG யே.

#Case 03:-*
Welcome Drink என்று பச்சை நிற திரவம் கொடுத்தார்கள்.
உண்மையில் இது குருநாகல் வைத்தியசாலையில் உள்ள நடைமுறை Emergency சீசர் செய்யும்போது வயிற்றில் உணவு இருந்தால் அதை செமிக்க செய்ய வழங்கப்படுகிறது.
இது பிழை என்றால் பொறுப்பு கூற வேண்டியது வைத்தியசாலை நிர்வாகமே.

#Case 04:- (Many Cases)*
2018, 2019 இல் பிரசவித்த தாய்மார்களும் குருநாகலை வைத்தியசாலைக்கு வந்து தமக்கு சரியாக Menses வருவதில்லை என முறையிட ஆரம்பித்து விட்டனர். (இவையும் அந்த complain களில் அடங்கும்.)
இப்படி மாற்றம் ஏட்படுவது பொதுவாக பால் கொடுக்கும் தாய்மாருக்கு சாதாரணம்.
அதுவும் அவர்கள் கருத்தடை ஊசிகள் போடுவதாக இருந்தால் இன்னும் வாய்ப்பு அதிகம்.
இதில் இன்னும் பெரிய நகைச்சுவை என்னவென்றால் 2018/19 காலப்பகுதியில் குருநாகலை வைத்தியசாலையில் வைத்தியர் ஷாபி
கடமை புரியவில்லை. (Transferred to Dambulla)

#Case 05:- (Many Cases)*
2 ஆம், 3 ஆம் நாட்களில் வந்த பெரும்பாலான Complain கள் சீசர் செய்தபின் தொடர்ந்து முதுகுவலி இருப்பதாக.
உண்மையில் இது சிசேரியனுக்காக முதுகில் போடும் ஊசி மற்றும் , பெண்களுக்கே பொதுவாக ஏட்படும் Arthritis ஆல் ஏற்படுவது.
இதட்கு குற்றம் சாட்டுவதாக இருந்தால் மயக்க மருந்து கொடுத்த வைத்தியரையே (Anaesthetist) குற்றவாளி கூண்டில் ஏற்ற வேண்டும்.
_(என்னடா இது வைத்தியர்களுக்கு வந்த சோதனை.)_

#Case 06:- Many Cases*
அனைவரையும் ஆட்டம் காண வைத்த Complains. குருநாகல் வைத்தியசாலையில் சிசேரியன் செய்த பின் 2வது பிள்ளை கிடைக்காத சகலரும் முண்டி அடித்துக் கொண்டு வந்ததில் பலர் கொண்டுவந்த Diagnosis Card களில் Ceser ஐ செய்தவர் வைத்தியர் ஷாபி அல்லாத வேறு சிங்கள வைத்தியர் என்பதே.
காரணம் Theatre list என்று வரும்போது rotation அடிப்படையில் 4 SHO களுக்கும் மாறி மாறி வரும்.
Ward இல் safi ஐ அடையாளம் கண்டவர்கள் Theatre இல் அடையாளம் காண முடியாது (mask போட்டிருப்பதால்.) ஆனால் அங்கு சீசர் செய்து இருந்தது சிங்கள வைத்தியர்.
இதனை மறைக்க அவர்கள் கொண்டுவந்த Diagnosis Card களை மறைத்து வைத்துவிட்டு Safi செய்ததாக Complain எழுதப்படுவதாக நடுநிலையான தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.
இவை 8 or 10 வருடம் பழமை வாய்ந்த நிகழ்வுகள் என்பதால் வைத்தியசாலை பதிவுகளிலும் தேடி பெற முடியாது.
காரணம் 5 வருடத்துக்க்கு முற்பட்ட பதிவுகள் (BHT) அழிக்கப்படுவது வழமை.

#Case 07:-*
இதட்கிடையில் Kurunagala Teaching Hospital Director Dr Sarath Weera Bandara 
ஒரு வைத்துயருக்கு எதிராக குற்றச்சாட்டு வரும்போது SLMC க்கும் Ministry க்கும் அறிவித்து அவர்கள் ஊடாகவே விசாரணை மேட்கொள்ளப்பட வேண்டும்.
(இவர் Wimal Weeravansa வின் நெருங்கிய ஆதரவாளர். அவர்களின் துவேசத்தின் உச்சம் தான் media களுக்கு அறிவித்து விட்டு உள்ளக விசாரணை செய்யப்போவதாக GMOA வின் உதவியை நாடுகின்றனர்.)
GMOA உம் வழமை போன்று பெரும்பான்மை இன வைத்தியர்களை காப்பாற்ற dr ஷாபிஐயும் முஸ்லீம் சமூகத்தையும் பலிக்கடா ஆக்க நினைக்கிறார்கள்.
#Reality:-*
உண்மையில் சிசேரியன் அல்லது Normal ஆக பிள்ளை கிடைத்து 2வது பிள்ளை கிடைப்பதட்கான வாய்ப்பு இல்லாமல் போகும் சந்தர்ப்பம் 5-7% ஆக இருப்பதாக பல நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகள் சொல்கின்றன. இவற்றுக்கு பல காரணங்கள் உண்டு.
_(Google பண்ணி பார்க்கவும்.)_
அந்த அடிப்படையில் நிறைய தாய்மார்கள் சமூகத்தில் உண்டு.
அடுத்து, அந்த பெண்களுக்கு இரண்டாவது பிள்ளை கிடைக்கவில்லை என்றால் இந்த 8 to 10 வருடங்கள் சோதித்து பார்க்கவில்லையா?
அந்த Report கள் எங்கே. ஒருவரும் இதுவரை காண்பிக்கவில்லை.
பொதுவாக பிள்ளை பேறு இல்லையென்றால் முதலில் ஆண்களின் Sperm test பண்ணப்படும்.
2 வது சோதனை பெண்களின் பலோப்பியன் குழாயை சோதிக்கும் HSA or Lap & Dye test இதை செய்து இருந்தாலே எப்போதோ உண்மை வெளியாகி இருக்கும். இது பெரிய மர்மமாகவே உள்ளது.
#Solution:-*
இப்போது கொஞ்சமாவது நடுநிலையாக பேசும் சுகாதார அமைச்சர் ராஜித அவர்கள் 6 பேர் கொண்ட (VOG மார் அடங்கிய) Committe ஒன்றை நிறுவி உள்ளார். இந்த Committe எல்லா உண்மையையும் வெளியே கொண்டுவந்துவிடும் என பயந்த மகிந்த சார்பு GMOA அதட்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த முரண்பாடுகளை மறைத்து எல்லா குற்றத்தையும் Dr ஷாபி மேல் போடக்கூடிய ஒரு குழுவை நியமிக்க முயற்சிக்கிறது.
Dr ஷாபி குற்றவாளியாக நிரூபிக்கப் பட்டால் கூட பொறுப்பு கூற வேண்டியது 
மேற்பார்வை செய்த VOG யே. இதுவரை அவர்கள் வாயே திறக்காமல் உள்ளார்கள்.

#Future:-*
இது வைத்தியர் ஷாபியுடன் நின்று விடப்போவதில்லை.
இன்னும் பல முஸ்லீம் VOG , surgeon கள் இலக்கு வைக்கப்பட்டு முகநூலில் பல பிரச்சாரங்கள் முடக்கி விடப்பட்டுள்ளன.
#இங்கே நாங்கள் செய்ய வேண்டியது என்ன?*
எமது சமூகத்தில் நிறைய முஸ்லீம் தாய்மார் இந்த 2ry Subfertility என்ற முதல் or 2ஆம் குழந்தை பிறந்தபின் பிள்ளைப்பேறு இல்லாமல் இருக்கிறார்கள்.
அவர்கள் தைரியமாக முன்வந்து SLMC, அருகில் உள்ள police நிலையம் மற்றும் வைத்தியசாலைக்கு Complain பண்ணவும்.
இது வெறுமனே Game க்கு செய்யும் விடயம் அல்ல.
முஸ்லீம் சமூகம் நிறைய பிள்ளைகளை பெறுகிறார்கள், குடும்ப கட்டுப்பாடு செய்வதில்லை என மாற்று மதத்தவரிடையே நிறைய குற்றச்சாட்டுகள் உண்டு.
இப்போது சிங்கள சமூகத்தை சேர்ந்த VOG மார் Profesor (Prof Hemantha Dodampahala) பலர் சிசேரியனின் போது பலோபியன் குழாயை சிதைக்கலாம் என அடித்த கூறும்போது அது அவர்களது அனுபவ வெளிப்பாடாகவே தோன்றுகிறது. இவர்கள் பற்றி பல முஸ்லீம் வைத்தியர்களும் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
(ஒருவேளை அவர்களை இனம்காண அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்ட ஒன்றோ இந்த பிரச்சினை என எண்ண தோன்றுகிறது. அல்லாஹ்வே எல்லாவற்றையும் அறிந்தவன்.)
இதனை வாசிப்போர் உங்களது குடும்பங்களில் 2ஆம் 3 ஆம் பிள்ளைப்பேறு கிடைக்காதவர்கள் இருந்தால் அவர்களை உற்சாகப்படுத்தி உண்மையை உலகறியச்செய்வோம்.

As received from Whatsup



No comments

Powered by Blogger.