Header Ads



முஸ்லிம் அமைச்சர் ஒருவரை இலக்குவைத்து, ஏன் பிரேரணை கொண்டு வரப்படுகிறது...?

அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து இதுவரை தம்முடன் கலந்துரையாடப்படவில்லை என்று ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொறுப்பேற்க வேண்டிய முதல் ஆள் ஜனாதிபதியாகும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

அடுத்ததாக மேற்படி சம்பவம் தொடர்பில் பிரதமரும், அமைச்சரவையும் அதற்கு பொறுப்பு கூற வேண்டும். இந்த தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் பொறுப்புக்கள் அதிகமாகவே இருந்துள்ளன.

எனினும் இதனை விடுத்து ஏன் முஸ்லிம் அமைச்சர் ஒருவரை இலக்கு வைத்து இந்த பிரேரணை கொண்டு வரப்படுகிறது என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வரும்போது ஜே.வி.பி அது தொடர்பில் முடிவெடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. எல்லாம் இனவாதம்,பொறாமை,சிலருக்கு அரசாங்கம் அமைக்க ஆதர்வு கொடுக்கவில்லை என எரிச்சல்.தன் சமூகத்துக்காக குரல் கொடுப்பது இந்த இனவாதிகலுக்கு தாங்க முடியவில்லை

    ReplyDelete

Powered by Blogger.