Header Ads



முஸ்லிம்கள் செய்த தவறை நாம் செய்யமாட்டோம், றிசாத்திற்கு ஆதரவாக சிறிதரன்...?

மகிந்த ராஜபக்ஷ அரசினால் தமிழ் மக்கள் மீது 2009 இல் இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டு தமிழ் மக்கள் கொல்லப்பட்ட  போது எந்தவொரு முஸ்லிம் தலைவர்களும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை.

மாறாக முஸ்லிம் தலைவர்களும், சில மக்களும் பள்ளிவாசல்களிலும், தென் பகுதிகளில் சில பிரதேசங்களிலும் பாற்சோறு வழங்கி சிங்கள மக்களுக்கும் இராணுவத்தை உற்சாகப்படுத்தும் வகையில் செயற்பட்டிருந்தார்கள். என பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இன்று -30- அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.  அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

அமிர்தலிங்கம் எதிர் கட்சி தலைவராக இருந்த போது அவருக்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்  கொண்டு வரப்படட  போது அப்போதிருந்த முஸ்லிம் அமைச்சர்களாவும் பாராளுமன்ற உறுப்பினர்களாவும் இருந்த  ஏழு பேர் அமிர்தலிங்கத்திற்கு எதிராக வாக்களித்திருந்தார்கள்.

ஆனால் அவர்கள் விட்ட அதே தவறுகளை நாங்களும் விட்டால் தொடர்ந்தும் இந்த நாட்டில் இஸ்லாமிய தலைவர்களும், ஈழத்தமிழர்களும்  ஒன்றாக பயணிக்க முடியாது, இணைந்த வடக்கு கிழக்கு என்ற சொற் பிரயோகத்தை நாம் பேசமுடியாது போய்விடும்.

எனவே கள யாதார்த்தை புரிந்துக் கொண்டு எரிகிற வீட்டில் எண்ணெய் ஊற்றுவது போன்றோ கொல்லி பிடுங்குவது போன்றோ நடந்து கொள்ளாது ஒரு சமூகம் பாதிக்காத வகையில் மனிதாபிமானத்துடன் பார்க்க வேண்டியது நமது கடமை.

எனவே ரிசாட் பதியூதினுக்கு  எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நாம் தொடந்து ஆராய்ந்து வருகின்றோம். ஒவ்வாரு மாவட்டத்திலும் உள்ள கட்சி  நிர்வாகிகளோடு, பேசியிருக்கிறோம், கட்சியின் மத்தியக் குழுவிலும், பாராளுமன்ற குழுவிலும் ஆராயவுள்ளோம். எனவே ஈழத்தமிழர்களின் நலன் சார்ந்து அந்த மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் இஸ்லாமிய மக்கள் பாதிக்கப்படாத வகையில்  அவர்களின் இருப்பு கேள்விக்குட்படுத்தாத வகையில்  ஒரு தீர்மானத்தை மேற்கொள்வோம்

ரிசாட் பதியூதின் தவறு செய்திருந்தால் அதற்கு நீதி மன்றங்கள் இருக்கிறது. அதனூடாக குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு விலக்க முடியும் ஆனால் பாராளுமன்றத்தின் ஊடாக ஒரு அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டிய தேவை இல்லை.இரண்டாயிரம் வருடங்கள் பழமைவாய்ந்த ஒரு இனத்தை சிதைத்து விடும் வகையில் அது அமைந்துவிடக் கூடாது, எனத் தெரிவித்தார்

5 comments:

  1. இந்த TNA திருத்தாத ஜென்மங்கள் தான்.
    றிசாத்துக்கு எதிராகவே TNA வாக்களிக்க வேண்டும்

    ReplyDelete
  2. முன்மாதிரியானசெயற்பாடு .

    ReplyDelete
  3. hats off hon.sridharan

    ReplyDelete
  4. உங்கள் சிறந்த முன்மாதிரியின் ஊடாக முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு பாடம் படிப்பியுங்கள்

    ReplyDelete

Powered by Blogger.