இஸ்லாமிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும், எரிபொருட்களைப் பயன்படுத்தாமல் இருக்க முடியுமா..?
‘உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பின் பின்னர் நாட்டில் முஸ்லிம் மக்களின் கடைகள், வர்த்தக நிலையங்களில் பௌத்த மக்கள் பொருட்களை கொள்முதல் செய்யக் கூடாது என்று கூறப்படுகிறது. அப்படியென்றால் இவ்வாறு கூறுபவர்கள் முஸ்லிம் மற்றும் இஸ்லாமிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பெற்றோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களைப் பாவிக்காமல் இருப்பார்களா? அவ்வாறு செய்தால் நாம் முஸ்லிம் கடைகளில் பொருட்களை கொள்முதல் செய்யாமல் இருக்கலாம். வர்த்தகர்களிடம் இனவாதம் காட்டக்கூடாது அதனால் பாதிப்பு எமக்குதான் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.’
இவ்வாறு தெரிவித்துள்ளார் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத், நாட்டில் ஏற்பட்டுள்ள இன்றைய சூழ்நிலையில் எமது கட்சியினர் இனவாதத்தில் வீழ்ந்து விடக்கூடாது என்றும் கூறினார்.
இரத்தினபுரி மாநகர சபை மண்டபத்தில் சனிக்கிழமை (11) நடைபெற்ற ‘தீவிவாதத்தை தோற்கடிக்கும் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்பும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் எமது கடப்பாடு’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பிரதம அதிதயாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.
அங்கு தொடாந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டு தாக்குதலானது ஓரு குறிப்பிட்ட இயக்கத்தினர்களால் மேற்கொள்ளப்பட்டது. இதனை உறுதி செய்யபப்ட்ட நிலையில் ஒருகுறிப்பிட்ட சமூகத்தினரை இனவாதம் கொண்டு பார்க்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார். metro

stop sending housemaids to middle east.....
ReplyDeleteமுதலில் இனவாதம் கதைத்த இனவாதிகளில் நீரும் ஒருவன்
ReplyDeleteவிஜித ஹேரத் உங்களின் கேள்வி நெத்தியடி.
ReplyDeleteஅதுதானே...
ReplyDelete