ஈமான் கொண்ட எங்களுக்கு, இது அக்கினிப் பரீட்சை
குண்டாந்தடிகளும் வாள்களும்
எம் உறவுகளின்
அங்கங்களை சிதைக்கட்டும்
உயிரை கருவறுக்கட்டும்
காழ்ப்புணர்வு தீயில்
வியர்வையின் கலவையிலான
உடமைகள் கருகட்டும்
இவை எமக்கு புதிதல்ல
இருதயம்
அச்சத்தில் உறைவதில்லை
இழந்ததை விட
அதிகமாய் பெறுவோம்
இறைவன் இல்லத்தை
உடைத்தும்
வேத நூலை எரித்தும்
வெறி கொள்வதால்
என் இறைவன்
வெட்கித்து தலை குனிவதில்லை
உன் நாட்டத்தை
அவனே நிறைவேற்றினான்
ஈமான் கொண்ட எங்களுக்கு
அது அக்கினி பரீட்சை
இதை நீ
அறிய வாய்ப்பில்லை
உன் இதயம்
ஒளி இழந்த கல்லறை
எது தீவிரவாதம்
என
உன் இனத்தின் மனசாட்சி
நன்கு அறியும்
நொறுங்கிய ஆன்மாவின்
பிரார்த்தனை பற்றி
நீ அறியவும் வாய்ப்பில்லை
அதன் பிடி
உன் வலிமையை மிகைத்தது
அதிகாரத்தை மிகைத்தது
நோன்பின் மகிழ்ச்சியில்
நீ மூட்டிய நெருப்பு
அது இறைவனது பொறுப்பே
உன் நாட்டத்தை
அவனே நிறைவேற்றினான்
ஈமான் கொண்ட எங்களுக்கு
அது அக்கினி பரீட்சை
இதை நீ
அறிய வாய்ப்பில்லை
Irfan fareed

Masha allah ...true message!
ReplyDelete😔😔😔😥
ReplyDeletemaasha Allah it's true
ReplyDelete