Header Ads



நாம் ஒற்றுமையாக செயற்படாவிடின், எங்கோ இருக்கும் மஹிந்த ஆட்சிக்கதிரையை பிடிப்பார் - மைத்திரிபால

நாம் ஒற்றுமையாக செயற்படாவிடின் எங்கோ இருக்கும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கதிரையை பிடித்துவிடுவார். எனவே நாம் ஒன்றுபட்டு செயற்படவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முற்பகல் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில்   நடைபெற்றது. இங்கு கருத்து தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.  

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி தொடர் குண்டுத்தாக்குதல்களை அடுத்து அரசாங்கத்தின் மீது பெரும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

எமக்குள் ஒற்றுமையின்மையின் காரணமாகவே விமர்சனங்கள் எம்மைநோக்கி வருகின்றன.  

எனவே நாம் ஒற்றுமையாக ஒன்றுபட்டு செயற்பட்டு நாட்டை  காப்பாற்றவேண்டும். நாம் ஒன்றுபட்டால்தான் நாட்டைக் காப்பாற்ற முடியும். 

நாம்  ஒன்றுபடாமல் பிரிந்து நிற்போமானால் எங்கோ இருக்கும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி அதிகாரத்தைபிடிக்கும் நிலைமை ஏற்பட்டு விடும். அதற்கு  நாம் அனுமதிக்கக்கூடாது. நாம் ஒன்றுபட்டு செயற்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. அப்போ 55 நாட்கள் இவர்தானே ஆட்சியை மஹிந்தவின் கையில் கொடுத்தார்.இப்போ என்னாச்சு.

    ReplyDelete
  2. அந்த குடும்பத்தை இறைவன் அழித்து விடுவானாக

    ReplyDelete
  3. Gota is a presidential candidate...........

    ReplyDelete

Powered by Blogger.