Header Ads



"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்"


கண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை.

பள்ளிவாசலை தொட்டால்போலிருக்கும் காத்தான்குடி ஹோட்டலுக்குள்ளேயே எல்லோரும் நுளைவார்கள்.

நானோ அதன் எதிரே இருக்கின்ற சிங்கள ஹோட்டலுக்கு போவதையே வழக்கமாக்கியிருந்தேன்
இதற்கு வேறோர் தனிப்பட்ட காரணமும் அந்த நாட்களில் இருந்தது. அது இங்கு தேவையற்றது,
சத்தியமாய் யாரையும் சைட் அடிப்பதற்கல்ல என்பதை மட்டும் அறுதியிட்டு கூறுகிறேன்.

பிற்காலத்தில் எனது பிள்ளைகளுடன் பிரயாணம் செய்த போதும் இதே ஹோட்டலுக்கே செல்வேன்,

'முன்புறம் நம்மவரின் கடையிருக்க இங்கு ஏன் கூட்டிவந்தீர்கள்? இங்குள்ளவை ஹலாலா? இவற்றை உண்ணலாமா? ' என்று கேட்டான் எனது மகன்களில் ஒருவன்

முன்னாலுள்ள கடைக்குத்தானே நம்மவர் எல்லோரும் போகிறார்கள், நாமாவது இங்கு வந்தால் இவர்களுக்கு மகிழ்ச்சியாய் இருக்குமல்லவா?

ஹராம், ஹலாலை ஆராயுமளவுக்கு எதை உண்ணப்போகிறோம்?

பிஸ்கட், பழவகைகள் எல்லாக் கடைகளிலும் ஒன்றுதான், அதிலேது வித்தியாசம்?' என்று மகனுக்கு கூறிக்கொண்டேன்,

ஏன் இதை ஞாபகப்படுத்துகிறேன் என்றால் இப்படி எனது பிள்ளைகளுக்கு கூறுயது போல்தான் சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் எனது தந்தையும் எனக்கு சொல்லித்தந்தார்,

நாளை எனது பேரப்பிள்ளைகளுக்கும் அவர்களின் தகப்பனும் இதையே சொல்லிக்கொடுக்க வேண்டும்,

சகவாழ்வு, இன உறவு என்பதெல்லாம் வெறும் சீசன் சுலோகங்களல்ல.

அதன் முக்கியத்துவம் பரம்பரை பரம்பரையாய் உணர்த்தப்படவேண்டும்

சின்னச்சின்ன உணர்வுகளால் பெரிய பெரிய இடைவெளிகளை நிரப்பலாம்.

இன்னுமொரு விடையம்.

அந்த சிங்கள ஹோட்டலுக்கு நாம் சென்றால் கடையின் முதலாளியே நேரடியாக மேசைக்கு வந்து கவனிப்பார், மட்டுமல்ல பரிமாறும் பாத்திரங்களின் சுத்தத்தில் நேரடிக்கவனம் செலுத்துவார்,

தவிரவும், முன் கடையிலிருந்து ஏதாயினும் வாங்கித்தரவா என்றும் கேட்பார். மறுத்துவிட்டு அங்கிருக்கும் சிங்கள பலகாரங்களையே விரும்பி உண்போம்

இவ்வளவுக்கும் நானோ, எனது தந்தையோ, பிள்ளைகளோ நிறைந்த தாடியுடையவர்களாகவே இருந்தோம்,

சகவாழ்வு சீசன் கோசமல்ல
அது மானஷீகமான உறவாடல்

-வஃபா பாறுக்-

12 comments:

  1. great mate.I salute you brother

    ReplyDelete
  2. இச்செயற்பாடு மிக
    சந்தோசமாக இருக்கு.
    மிக நுட்மான சக
    வாழ்வு பொறிமுறை..

    ReplyDelete
  3. இலங்கை முஸ்லிம்கள் இக்காலம் மட்டுமல்ல எக்காலத்திலும் மிக சிற்ந்த முன்மாதிரிகளாக வாழ்வார்கள் என்கிற நம்பிக்கையைத் தருகிற பதிவு

    ReplyDelete
  4. ஏண்ணிலடங்காத நல்லவர்கள் நமது சூழலிலும் இருக்கின்றார்கள். தம்கௌரவத்தை காட்டிலும் பிறரின் நலமே அத்தகைய பெருந்தகைகளுக்கு மிக மிக முக்கியமாக இருக்கின்றது. இதற்கு இன மத வேறுபாடுகள் என்ற எதுவுமே கிடையாது. பெற்றார்கள் எவ்வழியோ அவ்வழியே பிள்ளைகளும்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. சகவாழ்வு சீசன் கோசமுமல்ல நாடகமுமல்ல அது மானஷீகமான உறவாடல் மிக மிக அழகாகச் சொன்னீர்கள். இது முஸ்லீங்களில் எத்தனை வீதமானவர்களுக்கு விளங்கும் என்பதுதான் கேள்விக்குறி. உங்களைப்போன்ற சிலரினால்தான் சிங்கள மக்களில் சிலரிடமாவது எம்மீது கரிசனை உள்ளது. நன்றி வஃபா பாறுக்.

    ReplyDelete
  7. பரம்பரை இயல்பாக நற்பண்புகளும் கடத்தப்படுகின்றன.

    ReplyDelete
  8. இப்பண்பும் அன்பும் எதுவரைக்கும்? கட்டுரையாளர் சிங்கள இனவாதிகளால் தாக்க ப் படும் வரை க்கும் தான், தாக்கப்பட்ட தம் சகோதரனின் உடற்காயங்கள் ஆருவதற்குள்ளும், எறிக்கபட்ட வீடுகளும் சொத்துக்களும் அனையமுண்பும் உஙளுக்கெல்லா‌ சகவாழ்வு, ஐக்கியம், நல்லினக்கமென்பதெல்லாம் உங்களின் சுயநலவும் அறிந்து கொள்ளமுடியாத அறிவும்தான். பேசுவது எதுவும் இலகு, அதுவே தான் பாதிக்கப்பட்ட ஒருவராக இருந்திருந்தால் உணர்வு வேறு. என்னை ப் பொரித்த வரை க்கும் இதெல்லாம் உரோசமற்ற மனிதர் கள்.

    ReplyDelete
  9. Excellent Example. We need more people like you.
    Sorry we are in need of All people like your family.

    ReplyDelete
  10. Thalaiwalikku sithdhaleba poosinal ugandhadha

    ReplyDelete

Powered by Blogger.