Header Ads



புர்காவுக்காக வைத்தியப் பணியை துறந்த முஸ்லிம் பெண், தன் முடிவை மறுபரிசீலனை செய்வாரா..?

புர்காவை அகற்றாமல் வைத்தியப் பணியை ராஜினாமா செய்த ஒரு முஸ்லிம் பெண் வைத்தியர் பற்றிய தகவல் ஊடகங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்பெண்மணியின் நம்பிக்கை உறுதியையிட்டுப் பலர் மெய் சிலிர்த்த பதிவுகளை இட்டிருந்ததையும் இது குறித்து அவர் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென்ற கருத்துக்களையும் கூடக் காணக் கிடைத்தது.

முதலில் நாட்டில் முகம் மூடுவது சட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை இவ்வளவு கற்றும் அவர் புரிந்து கொள்ளாதிருப்பதற்காக அல்லது புரிந்தும் தனது எதிர்ப்பைக் காட்டுவதற்காகக் கவலை கொள்கிறேன்.

சகோதரி பாடசாலை முதற்கொண்டு பல்கலைக் கழக மருத்துவக் கல்வியை முடிக்கும் வரையும் ஏன் முடித்து முதற் கடமைப் பொறுப்பை ஏற்கும் வரையும் கூட முகத்தை மூடாதவராக இருந்திருக்கலாம்.

முகம் என்பது ஒருவரை மற்றவர் காண்பதற்கான உணர்வுகளைப் பகிர்வதற்கான ஓர் அடையாளமாகும். புன்னகையையும் பரஸ்பர அன்பையும் வெளிப்படுத்தப் பயன்படும் அங்கமாகும்.

இந்தச் சகோதரி ஒரு மருத்துவர் என்ற அடிப்படையில் முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமானவர் அல்லர். மனித குலத்துக்கான பொது நபர். அவர் கைகளில் இறைவனால் வழங்கப்பட்டிருப்பது ஆயிரமாயிரம் நோயாளிகளின் வருத்தம் மட்டுமல்ல அமானிதம் எனும் பொறுப்புமாகும் என்பதை அவர் உணர வேண்டும். ஒரு வைத்தியரின் புன்னகையை எதிர் கொள்ளும் ஒரு நோயாளியின் நோயில் ஒரு பகுதி இயல்பாகவே தீர்ந்து விடுகிறது.

முகம் மூடித் தொழில் செய்யாமல் உங்களது நம்பிக்கையின் உறுதியால் நீங்கள் சுவர்க்கம் செல்லலாம் என்று நினைத்திருக்கக் கூடும். 

ஆனால் உங்களுக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ள வரத்தை, திறமையை, பொறுப்பைப் பற்றியும் நீங்கள் இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன.

தயவு செய்து உங்களது முடிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்துமாறு ஓர் உடன் பிறப்பாக உங்களைக் கோருகிறேன்!

அஸ்ரப் சிஹாப்தீன்

11 comments:

  1. நிச்சயம் அமானிதம் வீணடிக்கப் படக் கூடாது தயவு செய்து வைத்திய சேவையை மீண்டும் பாரமெடுங்கள்.சகோதரி முகம் மூடுவது இஸ்லாமிய கடமை அல்ல .அது அரேபிய கலாசாரம் .முகமும் இரு கை மனக்கட்டும் தவிர்ந்த ஏனைய பகுதிகள் தான் பெண்ணின் மறைக்க வேண்டிய பகுதிகள்.

    ReplyDelete
  2. அப்பப்பா என்னா அறிவுரை.தான் மார்க்க விடயம் என ஏற்றுக்கொண்ட விடயமா தொழிலா என்ற தெரிவு வரும்போது அவர் தான் ஏற்றுக்கொண்ட வாழ்வியல் ஒழுங்குமுறயை தெரிவு செய்திருக்கிறார்.கட்டுரையாளரின் தர்க்கத்தின்படி பார்த்தால் மார்க்கத்திற்காக செல்வத்தை இழந்து விட்டு ஹிஜ்ரத் சென்ற சஹாபிகள் எல்லாம் செல்வமென்ற அமானித த்தை துஸ்பிரயோகம் செய்துவிட்டார்களோ? உங்கள் புரிதலின்படி புர்கா மார்க்கம் இல்லாது இருக்கலாம் ஆனால் அவரது புரிதலின்படி அது மார்க்கம்.உங்களைப் போன்றவர்களின் புரிதலைத்தான் அவரும் சரிகாண வேண்டுமென்ற எந்தத் தேவையுமில்லை.

    ReplyDelete
  3. மனிதனுக்கு வெட்கம் இல்லாது போகின்ற போதுதான் கீழ்தரமான எல்லா விடயங்களையும் செய்ய தலைப்படுகிறான். கீழ்தரமான விடயங்கள் சமூக விழுமியங்களைத் தகர்க்க வல்லது. மற்றும் சமூகச் சீர்கேடுகளுக்கு சாலை அமைக்கவல்லது. எனவேதான் முஹம்மது (ஸல்) அவர்கள் இப்படி வெட்கம் பற்றி உணர்த்துகிறார்கள்.

    இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

    ”நபி(ஸல்) அவர்கள் அன்சாரித் தோழர்களில் ஒருவரை கடந்து சென்றார்கள். அவர் தன் சகோதரருக்கு, ”வெட்கப்படுதல்” பற்றி உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ”அவரை விட்டு விடு! வெட்கம் என்பது, இறை நம்பிக்கையில் உள்ளதாகும்” என்று கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

    இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

    ‘வெட்கம் என்பது, நல்லதைத்தவிர வேறொன்றைக் கொண்டு வராது என நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) ”வெட்கம் அனைத்தும் நல்லதே” என்று முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் உள்ளது. (ரியாளுஸ்ஸாலிஹீன்: 682)

    அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

    ‘இறைநம்பிக்கை (ஈமான்), எழுபது அல்லது அறுபது சில்லரை கிளைகளாகும். அவற்றில் மிக மேலானது, ”லாயிலாஹ இல்லல்லாஹ்” என்று கூறுவதாகும். அவற்றில் மிகத் தாழ்வானது, பாதையில் உள்ள இடையூறு தரக்கூடியதை நீக்குவதாகும். மேலும் வெட்கம் கொள்வது, இறை நம்பிக்கையின் ஒரு கிளையாகும்” என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

    அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கின்றார்கள்:

    ‘கன்னிப் பெண் தன் அறையில் வெட்கப்பட்டுக் கொண்டிருப்பதை விட மிகக் கடுமையாக வெட்கம் கொள்பவர்களாக நபி(ஸல்) இருந்தார்கள். (புகாரி, முஸ்லிம்)

    Hits: 494

    ReplyDelete
  4. awe edutha mudiwu sariyaanadu.ippadi than owworu muslim pennum irukka wendum

    ReplyDelete
  5. நீங்க ஒரு ஆணியும் புடுங்கத் தேவையில்லை.

    ReplyDelete
  6. எமது எண்ணங்களிலும் ஓடியதை நீங்கள் எழுத்தில் வடித்துள்ளீகள்.Fine.

    ReplyDelete
  7. சகோதரர் அஸ்ரப் சிஹாப்தின் அவர்களே நீங்கள் தான் உங்கள் ஈமானை முதலில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
    முகம் மூடுவது சட்டரீதியாக தடைசெய்யப்பட்டதல்ல. அவசர காலச் சட்டத்தின் கீழ் தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டது. முகம் மூடுவது அல் குர்ஆனின் மூலமாக அல்லாஹ் போட்ட சட்டம். அதையும் மீறியதா நம் நாட்டுச் சட்டம்?
    ஒருவர் ஒரு விடயத்தை கற்ற நேரத்திலிருந்து அல்லது அதற்குரிய விளக்கங்ளைப் பெற்றதிலிருந்து பின்பற்றலாம். அவருடைய முன்னைய வாழ்க்கையை வைத்து எடைபோடுவது ஒரு முஸ்லிமுக்கு ஆகுமானதல்ல.
    அவர் இராஜினாமா செய்தது தனது பதவியைத் தான்- தனது சமூகப் பொறுப்பை அல்ல. அதேநேரம் சமூகப் பொறுப்பு பட்டம் பதவிகளில் உள்ளவர்களுக்கு மாத்திரமானதல்ல. ஒரு முஸ்லிம் எந்த நிலையில் இருந்தாலும் அவனுக்கென்று ஏறாளமான சமூகப் பொறுப்புக்கள் இருக்கின்றன. அதனை பதவியிலிருந்து கொண்டுதான் செய்யவேண்டும் என்பதில்லை.
    அடுத்தது, புன்னகையால் மாத்திரமல்ல அவரது நடத்தையாலும் நோய் குறையலாம். முகம் மூடும் எந்த வைத்தியரும் அஜ்னபீயான ஆண்களுக்கு முன்னால் மாத்திரமே அவ்வாறு நடந்துகொள்வார். பெண்கள் குழந்தைகளுக்கு மத்தியில் முகத்தைத் திறந்துகொண்டே வைத்தியம் செய்வார்.
    இறுதியாக டாக்டர் ஷாபியைப் பற்றி என்ன கூறுவீர்கள். அவரைப் பற்றி சாதகமான பாதகமான கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளன. பாதகமான கருத்துக்களைத் தெரிவிப்பவர்களிடம் சென்று டாக்டர் ஷாபியின் சமூகப் பொறுப்பை விளக்கிக் கூறி அவரிகளின் கருத்துக்களை மீள்பரிசீலனை செய்யுமாறு கூறுவீர்களா? அல்லது டாக்டர் ஷாபியிடம் சென்று எங்களுக்கும் வெட்கமாக இருக்கிறது எங்கேயாவது ஓடி ஒழிந்துகொள்ளுங்கள் என்று கூறுவீர்களா?
    அடுத்தவனுக்கு பயந்து பின்பற்றுவதல்ல இஸ்லாம். படைத்தவனுக்கு பயந்து பின்பற்றுவதே இஸ்லாம்.

    ReplyDelete
  8. இல்லை அந்த பெண் தணது முடிவை ஒரு போதும் மாற்றக்கூடாது இவர்கள் மூகத்தை மூடலாம் என்ற அனுமதி தர்ம் வரை அந்த பெண் வேலைக்கு வரக்கூடாது இந்த உலகை விட மார்க்கம் தான் முக்கியம்

    ReplyDelete
  9. Markathule illathatha kondu varavanukale arivaliyam
    Nallatha markatha solravanukal muttalam appdithan iruku neenka solrathu sariyanathu

    ReplyDelete
  10. மாரக்கம் என்று நீங்கள் எதை நினைக்கின்றீர்கள் என்பதுதான் இப்போதுள்ள பிரச்சினை.இஸ்லாம்
    மார்க்கமும் அதை வழிநடத்துகின்ற
    புனித திருக்குர்ஆனும் நபி ஸல் அலை
    அவர்களின் சுன்னாவும் உலகம் தோன்றியதிலிருந்து அது அழியும்வரை
    உள்ள எல்லா கால நேரங்களுக்கும் எல்லா சூழ்நிலைகளுக்கும்.அதனிடம்
    தீர்வு உள்ளது,வழிகாட்டல் உள்ளது
    என தம்பட்டம் அடிக்கும் நாம் இந்த விடயத்தில் விவாதித்து கொண்டிருப்பது அர்த்தமே அல்ல.இஸ்லாம் மிகவும் ஆழ அகலமான மார்க்கம் கடல்போன்ற பரந்த அறிவையும்,ஞானத்தையும்
    உடயது உளத்தூய்மையோடு இறையச்
    சமான தக்வாவோடு அதை அணுகினால் அது நேர்வழிகாட்டும்.
    எனபதுதான் அதன்தாரகமந்திரம். மார்கத்தை விவாதித்துக்கொண்டு
    விமர்சித்துக்கொண்டுபோனால் கரைகாணமுடியாத சூழல் ஏற்பட்டு எம்மத்தியில் பிரிவினையையும் பிரச்சினையையும்தான் நாம் எதிர்
    கொள்ள நேரிடும். தற்போது இதுதான்
    நடந்து கொண்டுள்ளது. சுன்னத்தான
    வணக்க வழிபாடுகள்,நடைமுறைகளை
    நாம் இறுக்கமாக பர்ளான கடமைகளிலும் பார்க்க முக்கியத்துவம்
    கொடுக்கப்போய் தற்போது பர்ளான
    விடயங்களைக்கூட செய்யலாமா என்பது கேள்விக்குறியாக உள்து போல்
    நிலமை மாறுபட்டுக்கொண்டிருக்கின்றது என்பதை கூட விழங்காமல் சிறுவிடயத்துக்குகூட விவாதித்துக்
    கொண்டிருக்கின்றோம்.இவ்வாறான
    பலவிடயங்கள் பற்றிய கண்ணோட்டங்களில் பல சவால்களையும் பிரச்சினைகளையும்
    நாம் எதிர்கொள்ள தயாராகவேண்டும்.
    இவ்வாறான சந்தர்ப்பங்களில் எல்லோ
    ரும் ஆள்ஆளுக்கு விளக்கமும் வியாக்கியானமும் வழங்கப்போனால்
    சாதாரண மக்களின் நிலை என்ன என்பது கவனிக்கப்பட வேண்டும்.
    எனவே எவ்வாறான நிலமைகளில் எம்மை வழிநடாத்த ஒரு தலைமையும் அதற்கான ஒரு சபையும் அவசியம்.
    தற்போது ஜம்மியத்துல் உலமா சபை
    அவைகளை யைாளுவது பொருத்தமாகும்.அதன் சரி பிழை பற்றி
    அல்லாஹ்விடம் பொறுப்புக்குரியவர்கள் அவர்கள்தான்.
    எனவே தலைமைத்துவ கட்டுப்பாட்டை
    நாம் கடைப்பிடுத்து ஒற்றுமைப்படுவோம். அல்லா எம்மை
    பொரிந்திக்கொள்வானாக.
    சகோதர் அஸ்ரப் ஸிஹாப்தீனின்
    கருத்து சிந்திக்கக்கூடியதாகும்.

    ReplyDelete

Powered by Blogger.