Header Ads



சஜித் மீது, ரணில் சீறிப்பாய்ந்தார் - வங்கிக் கொள்ளை குறித்து, உடனடி விளக்கம் வழங்க உத்தரவு

”தரம் குறைந்தவர்கள் தான் வங்கிக் கொள்ளையில் ஈடுபடுவார்கள் உயர் குலத்தை சேர்ந்தவர்கள் வங்கியை உருவாக்குவார்களென ” அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடும் விசனமடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் மத்திய வங்கி பிணைமுறி மோசடிக்கு நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக, ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் சஜித்தின் இந்த கருத்து அதனை நேரடியாகவே உறுதிப்படுத்துவது போல இருப்பதால் இவ்வாறு ரணில் விசனமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அமைச்சர் சஜித் ஆகியோருக்கிடையே நடக்கும் சொற்போரில் உச்சக்கட்டமாக அம்பாந்தோட்டையில் வைத்து கருத்து தெரிவித்த சஜித் – வங்கி உடைத்து உயர்ந்த அந்தஸ்துக்கு போக முடியாதென்றும் சமூகத்தில் தாழ்ந்தோரே வங்கிகளை உடைப்பார்களெனவும் உயர்ந்தோர் வங்கிகளை அமைப்பார்களென்றும் தெரிவித்தார்.

இது தொடர்பில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் சுட்டிக்காட்டியதையடுத்து ஆத்திரமடைந்துள்ள ரணில் இது தொடர்பில் சஜித்தை தொடர்புகொண்டு அதிருப்தியை வெளியிட்டாரென அறியமுடிந்தது. இந்த உரை எதிர்காலத்தில் கட்சிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமென்பதால் அது குறித்து விளக்கமளிக்குமாறு சஜித்திடம் ரணில் கேட்டாரென்றும் சொல்லப்பட்டது. TN

2 comments:

  1. மத்தியவங்கியின் பிணை முறி விவகாரம் ஐக்கிய தேசியக்கட்சியின்
    விவகாரமோ அல்லது அரசாங்கத்தின்
    விவகாரமோ அல்ல என்பதில் மக்கள்
    தெளிவாக உள்ளனர்.ஆனால் ஐக்கிய
    தேசியக்கட்சியை சேர்ந்த ஒரு சில மேல்
    மட்ட உறுப்பினர்களும் அதிகாரிகளும்
    இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதில்
    மாற்றுக்கருத்து கிடையாது. எனவே
    சம்பந்தப்பட்டவர்களை இனம்கண்டு
    தண்டனை வழங்குவதை அரசாங்கத்தினதும் ஐக்கிய தேசியக்கட்சியினதும் பொறுப்பு என்பதிலும் மக்கள் தெளிவுடன் உள்ளனர்.ஆகவே இந்தப்பொறுப்பில்
    இருந்து சஜித் பிரேமதாசா என்றாலும்,
    ரவிகருணநாயக்க என்றாலும்,ரணில்
    விக்கிரமசிங்க என்றாலும்,கருஜெயசூரிய என்றாலும்,
    அல்லது ஜக்கியதேசியக்கட்சியின்
    எந்த உறுப்பினரும் விடுபடமுடியாது
    என்பதுடன்,இந்த அரசின் தலைவர்
    என்ற முறையில் மேன்மைதங்கிய
    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா
    அவர்களும் இந்தப்பொறுப்பில் இருந்து
    விலக முடியாது எனபதிலும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

    ReplyDelete

Powered by Blogger.