Header Ads



அடுத்த ஜனாதிபதி கடுமையானவராக இருப்பார், சேறு பூசல்களைப் பொறுக்கமாட்டார் - எச்சரித்த மைத்திரி

சிறிலங்காவில் ஆட்சியில் இருந்த ஆறு அதிபர்களிலும், ஊடகங்களால் மிகவும் துணிச்சலாக அவமதிக்கப்பட்ட அதிபர் தானே என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்றுமாலை கொழும்பில் நடந்த அதிபர் ஊடக விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனக்குப் பின்னர் ஆட்சிக்கு வரும் அதிபர், தன்னைப் போன்று,  சேறு பூசல்களைப் பொறுத்துக் கொள்பவராக இருக்கமாட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் தன்னை நடத்தியதைப் போன்று, அடுத்த அதிபரையும் நடத்தும் எண்ணம் கொண்டிருந்தால், கவனமாக இருக்க வேண்டும் என்றும் ஊடகங்களை அவர் எச்சரித்தார்.

“இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் என்னை இலக்கு வைத்து தாக்கின. அவர்களுக்கு நான் எளிதான இலக்காக இருந்தேன்.

டி.பி.விஜேதுங்கவைத் தவிர வேறெந்த அதிபருக்கும், ஊடகங்களுடன் நல்லுறவு இருந்ததில்லை.

இப்போது அடுத்த அதிபர் பதவிக்குப் பலரது பெயர்கள் முன்மொழியப்படுகின்றன. இவர்களில் யார் அதிபராகப் பதவிக்கு வந்தாலும், ஊடகங்களுடக்கு அது கடுமையாக இருக்கும்” என்றும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.