Header Ads



தாக்குதல்களின் பின்னணியில் இருந்த, செல்வந்த குடும்பத்தின் இரத்த சகோதரர்கள்

இலங்­கையின் வீட்டு மனை­யாள்­களில் ஒரு­வ­ரான பாத்­திமா பஸ்லா அவ­ரது கொழும்பு சுற்­ற­யலில் வீதியின் எதிர்ப்­பு­றத்தில் உள்ள பாரிய மூன்று மாடி வீட்டில் வசிக்கும் நபர்­களை செல்­வந்த பிர­ப­லங்கள் என்றே நினைத்­தி­ருந்தாள். அவர்கள் இந்­த­ளவு அப­கீர்த்­தி­மிக்­க­வர்­க­ளாக மாறு­வார்கள் என அவள் ஒரு போதும் நினைத்­தி­ருக்­க­வில்லை.

மஹா­வில தோட்­டத்தில் வெள்ளை நிற மாளி­கையில் வசித்த இரண்டு சகோ­த­ரர்கள் கடந்த உயிர்த்த ஞாயிறு அன்று இடம்­பெற்ற 350 க்கும் மேற்­பட்ட உயிர்­களை காவு கொண்டு தேசத்தை உலுக்­கிய தற்­கொலை தாக்­கு­தல்­களின் முக்­கிய இயங்கு நபர்­க­ளாக அறி­யப்­பட்­டுள்­ளனர். இந்த தாக்­கு­தல்கள் கடந்த ஒரு தசாப்­த­மாக இலங்கை மக்கள் அனு­ப­வித்து வந்த சார்­ப­ள­வான சமா­தா­னத்தை நிலை குலைத்­துள்­ளது.

ஐ.எஸ். தீவி­ர­வாத அமைப்பு மூன்று தேவா­ல­யங்கள் மற்றும் நான்கு ஹோட்­டல்­களில் இடம்­பெற்ற ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட தாக்­கு­தல்­க­ளுக்கு உரிமை கோரி­யுள்­ளது.

33 வயது நிரம்­பிய இன்ஸாப் இப்­றாஹீம் என்ற செம்பு தொழிற்­சாலை உரி­மை­யாளர் மிகவும் சுறு­சு­றுப்­புடன் இயங்கிக் கொண்­டி­ருந்த சங்­க­ரிலா ஹோட்­டலில் காலை உணவு வேளையில் தனது வெடி பொருட்­களை வெடிக்க வைத்­த­தாக குறித்த குடும்­பத்­துக்கு நெருக்­க­மான தகவல் மூலம் ஒன்று கூறி­யது.
பின்னர் பொலிசார் அந்தக் குடும்­பத்தின் வீட்டை சோதனையிடச் சென்ற பொழுது அவ­ரது இளைய சகோ­த­ர­ரான இல்ஹாம் இப்­றாஹீம் குண்டு ஒன்றை வெடிக்க வைத்தார். இதில் அவர், அவ­ரது மனைவி மற்றும் அவர்­க­ளது மூன்று குழந்­தைகள் கொல்­லப்­பட்­ட­தாக பாது­காப்பு கார­ணங்­க­ளுக்­காக பெயர் குறிப்­பிட விரும்­பாத குறித்த தகவல் மூலம் கூறி­யது.

அவர்கள் நல்ல மனி­தர்கள் போன்றே தோன்­றினர் என இப்­ரா­ஹீமின் வீட்­டுக்கு எதிர்­த்தி­சையில் வசிக்கும் பஸ்லா ராய்ட்டர் செய்தி சேவைக்கு கூறினார். குறித்த வீடு தற்­ச­மயம் சீல் வைக்­கப்­பட்டு பொலி­ஸாரின் பாது­காப்பின் கீழ் உள்­ளது.

இந்த சகோ­த­ரர்­களின் பெயர்கள் உள்ளூர் ஊட­கங்­களில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. இலங்­கையின் அதி­கார தரப்­புகள் எந்த ஒரு தற்­கொலை தாக்­கு­தல்­தா­ரி­யி­னதும் பெயரை இது­வரை அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விக்­க­வில்லை. அத்­துடன் இது தொடர்­பாக பொலிஸ் தரப்­பிடம் கேட்ட பொழுது அவர்­களும் பதில் வழங்­க­வில்லை.

இந்த சகோ­த­ரர்­களின் தந்தை முஹம்மட் இப்­ராஹீம், இந்த தாக்­கு­தல்­க­ளுக்கு பொறுப்­பான நபர்கள் பற்­றிய விசா­ர­ணைக்­காக கைது செய்­யப்­பட்­டுள்ளார் என பொலிசார் கூறினர். மிகவும் செல்­வந்த வாச­னைத்­தி­ர­விய வர்த்­த­க­ரான இப்­ராஹீம் வர்த்­தக சமு­தா­யத்தின் தூண்­களில் ஒரு­வ­ராக கரு­தப்­ப­டு­கின்றார். அவ­ருக்கு ஆறு மகன்­களும் மூன்று மகள்­களும் உள்­ளனர். அவரை அறிந்த நபர்­களால் போற்­றப்­படும் மனி­த­ராக அவர் உள்ளார்.

“பிர­தே­சத்தில் உள்ள ஏழை மக்­க­ளுக்கு உணவு மற்றும் பண உதவி செய்­வதில் அவர் மிகவும் பிர­பல்யம் வாய்ந்­தவர். அவரின் பிள்­ளைகள் இந்த காரி­யத்தை செய்­தது நினைத்துக் கூட பார்க்க முடி­யாத விட­ய­மாகும்” இவ்­வாறு தனது இரு மகள்­க­ளையும் அன்­புடன் நோக்­கி­ய­வாறு பஸ்லா கூறினார். “அவர்கள் மேற்­கொண்ட செயல் இன்று அனைத்து முஸ்­லிம்­களும் சந்­தேகக் கண் கொண்டு நோக்­கப்­பட கார­ண­மாக அமைந்து விட்­டது”

அந்த குடும்­பத்­துக்கு நெருக்­க­மான ஒரு தகவல் மூலத்தின் பிர­காரம் 31 வயது நிரம்­பிய இல்ஹாம் இப்­ராஹீம் வெளிப்­ப­டை­யாக தீவி­ர­வாத கருத்­துக்­களை கூறு­ப­வ­ரா­கவும் இந்த தாக்­கு­தல்­களை திட்­ட­மி­டு­வதில் தொடர்­பு­டை­ய­தாக சந்­தே­கிக்­கப்­படும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பின் கூட்­டங்­களில் ஈடு­பாடு கொண்­ட­வ­ரா­கவும் காணப்­பட்டார் எனக் கூறி­யது.

அவ­ரது வர்த்­தக முயற்­சி­யாண்மை சகோ­த­ர­ரான இன்ஸாப் வெளியில் தனது கருத்­துக்­களில் நடு­நிலை கொண்­ட­வ­ரா­கவும் தனது ஊழி­யர்கள் மற்றும் கஷ்­டப்­படும் உள்ளூர் குடும்­பங்­க­ளுக்கு கொடை வழங்கக் கூடி­ய­வ­ரா­கவும் இருந்­த­தாக குறித்த தகவல் மூலம் கூறி­யது. நகை உற்­பத்தி செய்யும் மிகவும் செல்­வந்த நபர் ஒரு­வரின் மகளை மணம் முடித்த அவ­ருக்கு எந்தவித பணப் பிரச்­சி­னையும் காணப்­ப­ட­வில்லை.

“நான் மிகவும் அதிர்ச்­சிக்கு உள்­ளானேன், அவர்கள் இவ்­வா­றான மனி­தர்கள் என நான் ஒரு­போதும் எண்­ணி­யி­ருக்­க­வில்லை” என இப்­ரா­ஹீமின் வீட்­டுக்கு அருகில் பணி­பு­ரியும் வலை­ய­மைப்பு பொறி­யி­ய­லா­ள­ரான 38 வயது நிரம்­பிய சஞ்­சீவ ஜய­சிங்க கூறினார்.

ஞாயிறு காலை இடம்­பெற்ற குண்­டுத்­தாக்­கு­தல்கள் பௌத்­தர்­களை பெரும்­பான்­மை­யாக கொண்ட இலங்­கையில் இந்து இன தமிழ் பிரி­வி­னை­வா­தி­க­ளுடன் இடம்­பெற்ற உள்­நாட்டு யுத்தம் நிறை­வுற்ற பின்னர் 10 வரு­டங்­க­ளாக நிலவி வந்த சார்­பான அமை­தியை உலுக்கி உள்­ளது. அத்­துடன் இது மீண்டும் பிரி­வினை வாத வன்­மு­றை­களை மீள எழுப்­பலாம் என்ற அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இப்­ராஹீம் சகோ­த­ரர்கள் நாட்டை சீர்­கு­லைத்­த­மைக்­காக நாடு முழு­வதும் மக்­களின் தூற்­று­தல்­க­ளுக்கு இலக்கான போதும் அவர்களில் தங்கியிருந்த அவர்களது சமூக மக்களுக்கு அவர்களின் இழப்பு துக்கத்தை ஏற்படுத்தும்.
“ஏனைய முதலாளிகள் போலன்றி அவர் மிகவும் அன்பானவர். நான் அவரிடம் பணி புரிந்ததில் மகிழ்ச்சி அடைந்தேன்” என சர்வார் என்ற இன்ஸாபின் தற்போது கைவிடப்பட்டுள்ள கொழும்பின் சுற்றயலில் அமைந்துள்ள செம்பு தொழிற்சாலையில் பணி புரிந்த வங்கதேச பணியாளர் கூறினார். “அவர் போய்விட்டார், நான் இப்போது என்னசெய்வேன்?”

(ராய்ட்டர்)

No comments

Powered by Blogger.