Header Ads



பயங்கரவாத தாக்குதலை பயன்படுத்தி, மஹிந்த அணி அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கிறது - சம்பந்தன்

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் சர்வதேச தொடர்பு உள்ளதா? இலங்கையை ஏன் தாக்க தீர்மானித்தார்கள் ? இன ரீதியில் நாம் அனைவரும் பிளவுபட்டுள்ள காரணத்தை பயன்படுத்தியும், அரசியல் ரீதியாக எம்மத்தியில்  பிளவுகள் காணப்படுகின்றதை அறிந்துகொண்டும் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளனவா?என்ற கேள்விகளுக்கு அரசாங்கம் பதில்  கூறவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் சபையில் கேள்வி எழுப்பினார். 

அத்துடன் புதிய அரசியல் அமைப்பின் மூலமாக தேசியத்தை ஒன்றிணைத்தால் மட்டுமே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

இப்போதும் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் இந்த சம்பவங்களை பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்ற மட்டுமே நினைக்கின்றீர்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் சரியாகும் என நினைக்கின்றீர்கள். அவ்வாறு இருக்காது, முதலில் புதிய அரசியல் அமைப்பினை கொண்டுவர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

4 comments:

  1. இந்த கொடூரத்திட்கு பின்னால் அழையாவீட்டில் நுழைந்துள்ள அமெரிக்க புலனாய்வுத்துறை FBI அமைப்பினரை நம் நாட்டிலிருந்து விரட்டிவிட்டு நம் தாய்நாட்டின் அண்டைநாடுகளுடன் சேர்ந்து விசாரனை செய்தால் நம் நாட்டு பாதுகாப்புத்துறையால் இதை யார் செய்துள்ளார்கள் என்று மிக இழகுவாக கண்டறியலாம்
    பூமியில் இந்த கொடூரங்களை செய்பவர்கள் இஸ்ரேல்,அமெரிக்க மொசாத் அமைப்பினரே FBI நம் நாட்டின் உளவுத்துறையின் கண்கானிப்பை திசை திருப்பவும் நம் நாட்டின் பாதுகாப்பின் இரசியங்களை கண்டுகொள்ளவும்
    மன்னாரில் கண்டுகபிடிக்கப்பட்டுள்ள GAS,PATROL வளங்களை சூரையாடவே வந்துள்ளது நன்றாக விசாரித்தால் இந்த கொடூரக் கொலைகளுக்கு பின்னால் இயங்கிய அரசியல் கள்ளர்களையும் நன்றாக கண்டுபிடிக்கலாம்
    ஆகமொத்தம் நம் அனைத்து கஸடங்களையும் அனுபவிப்பது அப்பாவி பொதுமக்களே!

    ReplyDelete
  2. தமிழ் பயங்கரவாதிகள் ஒன்றை அறிந்துகொள்ளுங்கள் எவன் வந்தாலும் முஸ்லிம்களுக்கான பிரச்சினை ஓயப்போவதில்லை. ஆனால் எவன் வந்தால் தமிழ் அடிப்படைவாதமும் பிரிவினைவாதமும் துடைத்தெறியபடுமோ அவனே முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டியவர்கள். சம்பந்தன் அப்பனே பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் உம்மை எமக்கு நன்றாகவே தெரியும்

    ReplyDelete
  3. NGK அவர்களே, சிந்தபட்ட இரத்தம் போதாதா. இன்னும் உங்களுக்கு என்ன வேணும்? பாலைவனத்தின் நடுவே கோடரி நாக்கை உயர்த்தி சம்பந்தர் போன்ற கடைசி நிழல்மரங்களையும் வெட்டுகிற அடிப்படைவாதத்தின் குரலாக ஒலிக்கிறீர்கள். தயவு செய்து இனியாவது சிந்தியுங்கள். இது புதிய பிரச்சினையல்ல. 2013ல் நான் கைது செய்யபட்டபோது 1915 இனகலவர நூற்றாண்டை வகாபி சார்பு முஸ்லிம் இளைஞர்களின் இரத்தத்தில் கொண்டாடபோவதாக அதிகாரிகள் பேசியதை என் விடுதலையின் பின் எழுதினேன். நல்லகாலம் நீங்கள் முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டியவர்களாக கருதும் மகிந்தகுடும்ப அரசு 2015ன் முன்னம் கலைந்துபோனது. இப்பவும் நீங்கள் ஆதரிக்கும்கோத்தபாயாவுக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்கிறது என்றே கருதுகிறேன். NGK அவர்களே, நீங்கள் தமிழருக்கல்ல முஸ்லிம்களுக்கே ஆபத்தாக இருக்கிறீர்கள்

    ReplyDelete
  4. @Ngk நீ ஆரம்பத்தில் இருந்தே தமிழர்களுக்கு எதிரான துவேசத்தையே கக்கிக் கொண்டிருக்கிறாய்.

    ReplyDelete

Powered by Blogger.