Header Ads



வாக்கெடுப்பு நடத்திய, அஜித்திற்கு ரணில் எச்சரிக்கை

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பெரேராவை இன்று அலரி மாளிகைக்கு அழைத்த பிரதமர் ரணில் அவருக்கு கடுமையான வார்த்தைகளால் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக அறியமுடிகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியடையக் கூடிய வேட்பாளர் யார் என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி பெரேரா முகநூலில் நகருத்துக் கணிப்பொன்றை நடத்தியிருந்தார்.அந்த கருத்துக்கணிப்பில் 27 வீதமானவர்களின் ஆதரவு ரணிலுக்கும் 73 வீதமானோரின் ஆதரவு சஜித்துக்கும் கிடைத்திருந்தது..

ரணில் மற்றும் சஜித்தின் புகைப்படங்களை முகநூலில் வெளியிட்ட அமைச்சர் அஜித் பெரேரா- வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர்களில் யாருக்கு கூடுதல் வெற்றி வாய்ப்பு இருக்கிறதென கேட்டு கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு ஒன்றுக்கு விட்டிருந்தார்.

இதில் 27 வீதமான ஆதரவு மட்டுமே ரணிலுக்கு கிடைத்திருந்தது

இந்த கருத்துக் கணிப்பு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் கட்சித் தலைவர் ரணிலை தொடர்புகொண்டு அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ரணில் ஏற்கனவே தீர்மானித்துள்ள நிலையில் இப்படியான செயற்பாடுகள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் அஜித் பெரேரா மீது நடவடிக்கை எடுக்குமாறு சிலர் ரணிளிடம் கூறியிருந்தனர்.

இந்நிலையில் இன்று அஜித் பெரேராவை அழைத்து கடும் பேச்சு கொடுத்த ரணில் கட்சிக்குள் ரீம் அமைக்க முயல வேண்டாமென தெரிவித்துள்ளார்.

” கட்சிக்குள் ரீம் அமைத்து தலைமைகளை உருவாக்க முடியாது என்பதை புரிந்து கொள்ளும். கட்சிக்குள் குழு அமைப்பவர்களுக்கு எதிர்காலம் இல்லை என்பதை சொல்லிவைக்க விரும்புகிறேன்.இப்படியான வேலைகளை செய்யப்போய் கட்சியில் வகிக்கும் பதவிகளை இழந்துவிடவேண்டாம்..” என்றும் ரணில் எச்சரிக்கை விடுத்தாரென சொல்லப்படுகிறது . TN

No comments

Powered by Blogger.