Header Ads



பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான தேடுதல்கள், வெற்றிகரமாக முன்னெடுப்பு - யாரும் அச்சப்பட வேண்டாம்

அண்மையில், பயங்கரவாதத் தாக்குதல்களால் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் சுற்றுலாத்துறை, ஹோட்டல்கள் சார்ந்த வர்த்தகத் துறையை மீண்டும் கட்டியெழுப்பி, அதை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு, அரசாங்கம் மிகுந்த பொறுப்புடன் செயற்பட்டு வருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறினே தெரிவித்தார்.

சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்காக, எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கண்டறிவதற்கான அமைச்சரவை உப குழுவொன்றை இன்று (30) இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின்போது நியமிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு, சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்காக, சலுகை அடிப்படையில் நிதியுதவிகளை வழங்குதல் உள்ளிட்ட உதவிகள் தொடர்பாக, இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுற்றுலாத்துறை, ஹோட்டல் துறை சார்ந்த வர்த்தகர்களுடன், நேற்று (29), ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான தேடுதல்கள், தற்போது நாடளாவிய ரீதியில் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, நாட்டின் பாதுகாப்புத் துறை மீது தான் பூரண நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள், எந்தவித பின்னடைவுகளுமின்றி, தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனால், எவரும் அனாவசியமாக அச்சப்படத் தேவையில்லை என்பதோடு, இன்று (29)முதல் நாட்டின் சகல செயற்பாடுகளும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.