Header Ads



இஸ்லாமிய மதரசாக்களில் போதனைகளில் ஈடுபடும், 600 வெளிநாட்டவர்களை வெளியேற உததரவு

இஸ்லாமிய பாடசாலைகளிலும், மதரசாக்களிலும், போதனைகளில் ஈடுபடும், 600 வெளிநாட்டவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

சுற்றுலா நுழைவிசைவு மூலம், சிறிலங்கா வந்துள்ள இஸ்லாமிய போதகர்கள் பலரும், இஸ்லாமிய பாடசாலைகளிலும், மதரசாக்களிலும், மத போதனை மற்றும்  அரபுமொழியை கற்பித்து வருகின்றனர்.

இவற்றின் ஊடாகவே, அடிப்படைவாத கருத்துக்கள் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதுடன்,  இவ்வாறான மதப் பாடசாலைகளை தடை செய்யுமாறும், கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்த நிலையிலேயே 600 வெளிநாட்டவர்களை,  வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு, சிறிலங்கா பிரதமர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

அத்துடன், இவர்கள் எப்படி நுழைவிசைவு பெற்றனர், அவர்களுக்கான இருப்பிட வசதிகளை செய்து கொடுத்தது யார் என்பன போன்ற விபரங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, முஸ்லிம் விவகார அமைச்சின் அதிகாரிகளுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

3 comments:

  1. We know.s all this behind your mosaad and our enemie.
    INSHA ALLAH WILL DRIVEN OUT YOUR SOON AS POSSIBLE LIKE MR REGIMENT.MAKE DUA EACH MUSLIMS

    ReplyDelete
  2. சில முஸ்லீம் பெயர் தாங்கிகள் செய்த அட்டூழியத்தால் இன்று அதிகம் பிரச்சினைகுள் சிக்கி இருப்பது சாதாரண முஸ்லீம் மக்களே.

    ReplyDelete
  3. Hon. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க‌ Sir,

    I wish to inform your kind consideration that are

    01. இதுவரையில் பள்ளிவாசலாக பதிவு செய்யப்படாத பள்ளிகளது (குறிப்பாக, தௌகித் வாதிகளது பள்ளி_தௌவ்வா சென்றர்களது) இயக்கத்தை உடனடியாக இடைநிறுத்த வேண்டும்.

    02. ஜும்மா பள்ளியாக பதிவு செய்யப்பட்டாத பள்ளிகளில் ஜும்ஆ தொழுகை நாடாத்துவதை அரசு (முஸ்லீம் விவகார அமைச்சு / உள்ளூராட்சி மன்றங்கள்) தடைசெய்யுமாயின், அவ்வூரில் உள்ள குழப்பகரமான சூழ்நிலைகளை இல்லாது ஒழிக்க முடியும்.

    03. ஏதாவது ஒரு ஊரில் புதிதாக பள்ளிவாசல் ஒன்று அமைக்க வேண்டுமாயின், அவ்வூரில் உள்ள மரபுவழி முஸ்லீம்களது பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபையின் அனுமதியின்றி அமைக்க முடியாது. என்கின்ற ஒரு இறுக்கமான சட்டத்தை கொண்டுவரல் வேண்டும்.

    04. ஏதாவது ஒரு ஊரில், மரபுவழி முஸ்லீம்களது பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபையின் அனுமதியின்றி, அப்பள்ளிவாசலுக்கு அருகாமையில் அதாவது மரபுவழி முஸ்லீம்களது பள்ளியில் இருந்து 500 மீற்றர்க்குள் புதிதாக பள்ளிகள் அமைக்கப்பட்டிருப்பின் அவை அவ்விடத்திலிருந்து நீக்கப்படல் வேண்டும்.

    05. ஏற்கனவே ஒரு பள்ளிவாசல் இருக்கின்ற போது அப்பள்ளிவாசலுக்கு அருகாமையில், அப்பள்ளிக்கு முன்பாக, அப்பள்ளியின் ஒலிபெருக்கியின் சத்தம் கேட்கும் எல்லைக்குள் மீண்டும் ஒரு பள்ளி அமைத்தல் என்பது மக்களிடத்தில் வண்முறை மனப்பாங்கை உருவாக்கும் என்பதை அனைவரும் கருத்தில் கொள்ளல் வேண்டும்.

    Your kind consideration and co-operation in this regard is highly appreciated. please.

    Thanks.

    ReplyDelete

Powered by Blogger.