Header Ads



கொழும்பு தாக்குதலில் 48 வெளிநாட்டவர்கள் மரணம் - 14 பேர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை

கொழும்பில் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை க்குண்டுத் தாக்குதல் கார­ண­மாக இது­வரை 48 வெளி­நாட்­ட­வர்கள் உயிரிழந்துள்­ள­தாக வெளிவி­வ­கார அமைச்சு அறி­வித்­துள்­ளது.

பிர­தான மூன்று ஹோட்­டல்­களில் நடத்­தப்­பட்ட தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களில் இவர்கள் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

இவர்­களில் 34 வெளி­நாட்­ட­வர்கள் அடை­யாளம் காணப்­பட்­டுள்ள நிலையில் 14 பேர் இது­வ­ரையில் அடை­யாளம் காணப்­ப­ட­வில்லை என வெளி­வி­வ­கார அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது. 

அதற்­க­மைய, பங்­க­ளாதேஷ் நாட்­டவர் ஒருவர், சீன நாட்­ட­வர்கள் இருவர், இந்­திய நாட்­ட­வர்கள் 10 பேர், பிரான்ஸ் நாட்­டவர் ஒருவர், டென்மார்க் நாட்­ட­வர்கள் மூவர், ஜப்பான் நாட்­டவர் ஒருவர், போர்த்­துக்கல் நாட்­டவர் ஒருவர், சவுதி அரே­பிய நாட்­டவர் ஒருவர், ஸ்பெயின் நாட்­டவர் ஒருவர், துருக்கி நாட்­டவர் ஒருவர், பிரித்தானிய நாட்­ட­வர்கள் 6 பேர், அமெ­ரிக்க மற்றும் பிரித்­தா­னிய குடி­யு­ரிமை பெற்ற இருவர், அவுஸ்­தி­ரே­லியா மற்றும் இலங்கைக் குடி­யு­ரிமை பெற்ற இருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­தாக அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது. 

அடை­யாளம் காணப்­ப­டாத 14 வெளி­நாட்­ட­வர்­களின் சட­லங்கள் கொழும்பு சட்ட வைத்­திய அதி­கா­ரியின் அலு­வ­ல­கத்தின் பிரேத அறையில் வைக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை, குண்டுத் தாக்குதலில் காயமடைந்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 16 எனவும் அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.

No comments

Powered by Blogger.