Header Ads



400 தெளஹீத் பள்ளிவாசல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா..? ஹலீம் கூறுவது என்ன

(எம்.ஆர்.எம்.வஸீம்)

சிங்கள மக்களை என்னில் இருந்து தூரப்படுத்தவே தயாசிறி ஜயசேகர பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருவதாக தபால் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் ஏ,எச்.எம்.ஹலீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர கட்சி தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது, அமைச்சர் ஹலீம் நாடுமுழுவதும் 400 தெளஹீத் பள்ளிவாசல்களை பதிவுசெய்துள்ளதாக தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் தபால் அமைச்சில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்த அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்த 2015 ஆம் ஆண்டுமுதல் முஸ்லிம் சமய அமைச்சராக நான் செயற்படுகின்றேன். இந்த காலப்பகுதியில் 400 தெளஹீத் பள்ளிவாசல்களை அமைக்க நான் அனுமதி அளித்ததாகவும் அதில் 50 பள்ளிவாசல்கள் எனது கண்டி மாவட்டத்தில் அமைக்க அனுமதி வழங்கி இருப்பதாகவும் தயாசிறி ஜயசேகர குற்றம் சாட்டியிருந்தார். அவரின் இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அப்பட்டமான பொய்யாகும். 

அத்துடன் இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் கண்டியில்  எனது தொகுதியான ஹரிஸ்பத்துவ சிங்கள மக்களை வெறுப்படையச்சையும் திட்டத்திலே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. 

அத்துடன் நாட்டில் மொத்தம் இரண்டாயிரத்து 599 பதிவு செய்யப்பட்ட பள்ளவாசல்கள் இருக்கின்றன. அதேபோன்று ஆயிரத்தி 775 மத்தரசாக்களும் 317 அரபுக்கல்லூரிகளும் இருக்கின்றன. கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 282 பள்ளிவாசல்கள் இருக்கின்றன. அதில் 94 பள்ளிவாசல்கள் எனது காலத்தில் பதிவு செய்திருகின்றேன். கண்டியில் இடம்பெற்ற வன்முறையில் அதிகமான பள்ளிவாசல்கள் பாதிக்கப்பட்டன. அப்போது நீதிமன்ற நடவடிக்கைகளினூடாக அவற்றுக்கு நஷ்டயீடு பெற நடவடிக்கை எடுத்தபோது, அதில் அதிகமான பள்ளிவாசல்கள் பதிவு செய்திருக்கவில்லை. அதனால் எமக்கு அதில் பாதிப்பு ஏற்பட்டது. 

அதனால்தான் நான் நாட்டில் இருக்கும் பதிவு செய்யாத அனைத்து பள்ளிவாசல்களையும் வக்பு சபையில் பதிவு செய்துகொள்ளுமாறு நான் அறிவிப்பு செய்தேன். அதன் பிரகாரமே கண்டியில் 94 பள்ளவாசல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவ்வாறு இல்லாமல் இவை அனைத்தும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல்கள் அல்ல. ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டவையாகும். பொதுவாக புதிதாக பள்ளிவாசல்களை பதிவு செய்வதாக இருந்தால் அது நிர்மாணிக்கப்பட்டு 6மாதங்கள் வரை செல்லும். அந்த காலப்பகுதியில் குறித்த பள்ளிவாசல் பதிவு செய்வதற்கான தகுதிகள் தொடர்பில் வக்கு சபையினால் ஆராயப்படும் என்றார்.

1 comment:

  1. Hon. அமைச்சர் ஏ.எச்.அம். ஹாலீம் Sir,

    I wish to inform your kind consideration that are

    01. இதுவரையில் பள்ளிவாசலாக பதிவு செய்யப்படாத பள்ளிகளது (குறிப்பாக, தௌகித் வாதிகளது பள்ளி_தௌவ்வா சென்றர்களது) இயக்கத்தை உடனடியாக இடைநிறுத்த வேண்டும்.

    02. ஜும்மா பள்ளியாக பதிவு செய்யப்பட்டாத பள்ளிகளில் ஜும்ஆ தொழுகை நாடாத்துவதை அரசு (முஸ்லீம் விவகார அமைச்சு / உள்ளூராட்சி மன்றங்கள்) தடைசெய்யுமாயின், அவ்வூரில் உள்ள குழப்பகரமான சூழ்நிலைகளை இல்லாது ஒழிக்க முடியும்.

    03. ஏதாவது ஒரு ஊரில் புதிதாக பள்ளிவாசல் ஒன்று அமைக்க வேண்டுமாயின், அவ்வூரில் உள்ள மரபுவழி முஸ்லீம்களது பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபையின் அனுமதியின்றி அமைக்க முடியாது. என்கின்ற ஒரு இறுக்கமான சட்டத்தை கொண்டுவரல் வேண்டும்.

    04. ஏதாவது ஒரு ஊரில், மரபுவழி முஸ்லீம்களது பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபையின் அனுமதியின்றி, அப்பள்ளிவாசலுக்கு அருகாமையில் அதாவது மரபுவழி முஸ்லீம்களது பள்ளியில் இருந்து 500 மீற்றர்க்குள் புதிதாக பள்ளிகள் அமைக்கப்பட்டிருப்பின் அவை அவ்விடத்திலிருந்து நீக்கப்படல் வேண்டும்.

    05. ஏற்கனவே ஒரு பள்ளிவாசல் இருக்கின்ற போது அப்பள்ளிவாசலுக்கு அருகாமையில், அப்பள்ளிக்கு முன்பாக, அப்பள்ளியின் ஒலிபெருக்கியின் சத்தம் கேட்கும் எல்லைக்குள் மீண்டும் ஒரு பள்ளி அமைத்தல் என்பது மக்களிடத்தில் வண்முறை மனப்பாங்கை உருவாக்கும் என்பதை அனைவரும் கருத்தில் கொள்ளல் வேண்டும்.

    Your kind consideration and co-operation in this regard is highly appreciated. please.

    Thanks.

    ReplyDelete

Powered by Blogger.