Header Ads



தெமட்டகொடை வீட்டிலிருந்து பெருமளவு பணமும், 3 இரத்தினக்கற்களும் மீட்பு

கடந்த 21 ஆம்  திகதி உயிர்ப்பு ஞாயிற்றுக்கிழமை, இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதலில், முக்கிய தற்கொலைதாரிகளின் குடியிருப்பான வெடிப்பு ஏற்பட்ட கொழும்பு, தெமட்டகொடை வீட்டிலிருந்து, முக்கிய சில பொருட்களும் மற்றும் வணாத்தவில்லு பகுதியிலிருந்து சிலபொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

தற்கொலைத் தாக்குதலில், ஈடுபட்ட இரு சகோதரர்களுடையதும், பிரபல வர்த்தகருடையதுமான தெமட்டகொடை வீட்டினை முற்றுகையிட்ட பொலிஸாருக்கு பல பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

குறித்த வீட்டிலிருந்து, சுமார் 30 மில்லியன் ரூபா, 15 மில்லியன் ரூபா பெறுமதியான  3 இரத்தினக்கற்களும் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன்  15 மில்லியன் ரூபா பணமும் 5 இலட்சம்  ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்கள், நகைகள் என்பனவற்றை பொலிஸார் குறித்த தெமட்டகொட வீட்டிலிருந்து கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்களின் கொலைக்காக பயன்படுத்தியிருக்கலாமென சந்தேகிக்கப்படும், துப்பாக்கியொன்றை நிந்தவூரில் பயங்கரவாதிகள் தங்கியிருந்த வீடொன்றிலிருந்தும், மற்றொரு துப்பாக்கியை வணாத்தவில்லு பகுதியிலுள்ள காணியொன்றிலிருந்தும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, ரி-56 ரக துப்பாக்கியொன்றும், 6 ரிவோல் துப்பாக்கிகளும் மற்றும் பெருமளவு வெடிபொருட்களும் குறித்த வணாத்தவில்லு காணியிலிருந்து புதைக்கப்பட்டிருந்த நிலையில்  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த பல ஆதாரங்களைப்பெற்ற பொலிஸார், கடந்த ஞாயிற்க்கிழமை இடம்பெற்ற தொடர் தற்கொலைத்தாக்குதலுக்கும் உள்ள நெருங்கிய தொடர்புகள் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.