Header Ads



பொதுஜன பெரமுன - சுதந்திர கட்சி இன்றைய 3 ஆவது சுற்றுப்பேச்சில் நடந்தது என்ன..?

பொதுஜன பெரமுனவும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் ஒன்றினைந்து அமைக்கவுள்ள  பரந்துப்பட்ட கூட்டணிக்கான மூன்றாவது பேச்சுவார்த்தை இன்று -09- எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. 

இப் பேச்சுவார்த்தைக்கு பொதுஜன பெரமுனவின் சார்பில்  பேராசிரியர் ஜி.எல்.பீறிஸ், பாராளுமன்ற உறுப்பினர்  டலஸ்  அழகப்பெருமவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில்  சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால மற்றும் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாச ஆகியோரும் கலந்துகொண்டனர். 

இதன்போதே மேற்கண்டவாறு கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

பரந்துப்பட்ட கூட்டணியமைத்தல் தொடர்பில் முன்னெடுத்த இரண்டாவது  பேச்சுவார்த்தையில் 20 சித்தாந்த கொள்கை திட்டங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன. இம்முறை 25 கொள்கை திட்டங்கள் இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்சிகளையும் எவ்வாறு  கொள்கை ரீதியில் ஒன்றினைத்து நிலையான ஒரு அரசியல்  கொள்கையினை வகுப்பது  தொடர்பில் இரு தரப்பிலானும்   திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

எனவே எதிர்வரும் 09 ஆம் திகதி இடம்பெறவுள்ள நான்காவது  பேச்சுவார்த்தை மாறுப்பட்டதாக காணப்படும். இதுரையில முன்னெடுக்கப்பட்ட  மூன்று பேச்சுவார்த்தைகளும் ஆவணப்படுத்தப்பட்டு அவை ஸ்ரீ லங்கா சுதந்திரை கட்சியின் மத்திய  செயற்குழுவின்  செயற்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதுடன்   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்  எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது கவனத்திற்கு கொண்டு சென்றதன் பின்னர் அடுத்த பேச்சுவார்த்தையினை மேற்கொள்ள  தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது  மாகாணசபை தேர்தலை  விரைவாக நடத்துவதற்கு  தேவையான நடவடிக்கைகளை இருதரப்பினரும் மேற்கொள்ளவுள்ளோம்.

மாகாண சபை தேர்தலை நடத்த முன்னெடுக்கப்படும் அனைத்து   நடவடிக்கைகளுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முழுமையான ஆதரவு வழங்கும். ஜனநாயகத்தை மதிக்கின்ற அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். பரந்துப்பட்ட கூட்டணி நிச்சயம் வெற்றிப் பெறும் என்ற  நம்பிக்கை  உள்ளது என்றார்.

பொதுஜன  பெரமுனவின்  தவிசாளர் ஜி. எல். பீறிஸ் குறிப்பிடுகையில்,

பரந்துப்பட்ட கூட்டணியமைத்தல் தொடர்பில்  இடம்பெற்ற பேச்சுவார்ததை பல கேள்விகளுடன் நிறைவுப்ப பெற்றுள்ளது.  வரவு - செலவு திட்டத்தின்  போது  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி   செயற்பட்ட விதம் பல சந்தேகங்களை தோற்றிவித்துள்ளது என்று  எமது தரப்பில் குறிப்பிடப்பட்டது.  இதற்கு சுதந்திர கட்சியினர் முறையான   காரணத்தை குறிப்பிடவில்லை.  

இரண்டு தரப்பினரும் கொள்கை ரீதியில்  ஒன்றினைய வேண்டுமாயின்    அனைத்து விடயங்களிலும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். வரவு செலவு திட்டத்தில்   இவர்களின் செயற்பாடு பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் மத்தியில் அதிருப்தியினையும், அவநம்பிக்கையினையும் ஏற்படுத்தியது. இதனை  சுதந்திர கட்சியினர் கூட்டணியமைக்கும் முன்னரே திருத்திக் கொள்ள வேண்டும்.

No comments

Powered by Blogger.