Header Ads



மைத்ரி – மஹிந்த மூடிய, அறைக்குள் பேச்சு

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவுக்குமிடையில் மூடிய அறைக்குள் முக்கியமான பேச்சுவார்த்தையொன்று சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாக நம்பகரமாக அறியமுடிகின்றது.

ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் நடந்த இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்தே விரிவாகப் பேசப்பட்டதாகவும் புதிய அரசியல் கூட்டணியை ஏற்படுத்தும் முயற்சிகள் குறித்து ஆழமாக ஆராயப்பட்டதென்றும் அறியமுடிந்தது.

ஜனாதிபதி வேட்பாளர் விடயம் குறித்து பேசப்பட்டபோதும் அதனை அரசியல் கூட்டணி அமைந்த பின்னர் முடிவெடுக்கலாமென்று இரு தலைவர்களும் முடிவு செய்ததாக மேலும் அறியக் கிடைத்தது.

வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பில் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலர் வாக்களிக்காமை , பொதுவெளியில் பலர் அரசியல் ரீதியான சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைப்பது குறித்து மஹிந்த ராஜபக்ச இந்த சந்திப்பின்போது மைத்திரியிடம் சுட்டிக்காட்டியதாகவும் தெரியவந்தது.

இந்த சந்திப்பின் பின்னரே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை ஜனாதிபதி சந்தித்தாரென்பது குறிப்பிடத்தக்கது.

t-n

3 comments:

  1. 52 days losers meeting.....

    ReplyDelete
  2. What's cooking for the New Year? Are we in for another shock!

    ReplyDelete
  3. Foolish guys running our country.
    No future for our Motherland

    ReplyDelete

Powered by Blogger.