4 ஆண்டுகளில் வில்பத்துவில் எவருக்கும், காணிகள் வழங்கப்படவில்ல - ஜனாதிபதி
தான் ஆட்சிக்கு வந்து கடந்த நான்கு ஆண்டு காலத்தில் வில்பத்து வனப்பகுதியில் ஒரு அங்குல நிலத்தை கூட எவருக்கும் வழங்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த காலப்பகுதியில் தனி நபர்களுக்கோ, அமைப்புகளுக்கோ வில்பத்து வனப் பகுதியில் காணிகள் வழங்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
பௌத்த சமய புனித நூலான திரிபீடகத்தை உலக உரிமையாக பெயரிடும் யோசனையை யுனேஸ்கோ அமைப்பிடம் கையளிக்கும் நிகழ்வு கண்டி தலதா மாளிகக்கு அருகில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வில்பத்து வனப்பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு குடியேற்றங்கள் மற்றும் தொழிற்சாலை நிர்மாணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்த குற்றச்சாட்டை அமைச்சர் றிசார்ட் பதியூதீனும் நாடாளுமன்றத்தில் மறுத்திருந்தார்.

Post a Comment