Header Ads



முஸ்லிம் ஊர்கள், இப்படி நடந்துகொள்ளக் கூடாது

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் – பயிற்சி பெற்றுவந்த நிலையில் மரணமடைந்த ஆசிரியை ஒருவரின் பிரேரத்தை, அவரின் ஊருக்குக் கொண்டு செல்வதற்காக, முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள, பிரேதங்களை கொண்டு செல்வதற்கான இலவச வாகனங்களை கேட்ட போதும், ‘முஸ்லிம் அல்லாத பிரேதங்களைக் கொண்டு செல்வதற்கு குறித்த வாகனங்களை வழங்க முடியாது’ எனக் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மறுத்தமை தொடர்பில், கடுமையான கண்டனங்களும் விமர்சனங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

ஹட்டன் – மஸ்கெலியாவை சேர்ந்த ஆசிரியை ச
த்யகலா என்பவரே, சுகயீனம் காரணமாக அட்டாளைச்சேனையில் மரணமடைந்தார்.

இதனையடுத்து, பிரேதத்தை – குறித்த ஆசிரியையின் ஊருக்கு கொண்டு செல்வதற்காக, முஸ்லிம் ஊர்களிலுள்ள இலவச சேவை வழங்கும் ஜனாஸா வாகனங்களை (பிரேதங்களைக் கொண்டு செல்லும் வாகனம்) கேட்ட போதும், முஸ்லிம் அல்லாத பிரேதங்களைக் கொண்டு செல்ல முடியாது என்று கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மறுத்துள்ளனர்.

இந்த தகவலை அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையுடன் தொடர்புடைய முஸ்லிம் ஆசிரியர்கள் ‘புதிது’ செய்தித் தளத்திடம் தெரிவித்ததோடு, இது குறித்து தமது விசனங்களையும் பதிவு செய்தனர்.

மரணமடைந்த ஒருவரின் உடலைக் கொண்டு செல்வதிலும், மதப் பாகுபாடு பார்க்கும் இவ்வாறானவர்களின் இந்த எண்ணம் – மிகவும் கேவலமானது என்றும் மேற்படி முஸ்லிம் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

மத நல்லிணக்கத்தை வெளிக் காட்டுகிறேன் என்று கூறி, ஏனைய மத ஸ்தலங்களில் சிரமதானம் செய்வது, ஏனையவர்களின் மத நிகழ்வுகளில் அன்னதானம் வழங்குவது போன்ற நடவடிக்கைகளில் முஸ்லிம்கள் ஈடுபடுவதை விடவும், மரணமடைந்த ஒரு மாற்று மதத்தவரின் பிரேதத்தைக் கொண்டு செல்வதற்கு தமது இலவச ஜனாஸா வாகனங்களை வழங்கி உதவுவதே மனிதாபிமானமும், மத நல்லிணக்க செயலுமாகும் என்றும், மேற்படி முஸ்லிம் ஆசிரியர்கள் கூறினர்.

எவ்வாறாயினும், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீரின் முயற்சியில், குறித்த ஆசிரியையின் பிரேதம் – அவரின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது.

12 comments:

  1. Very Shameful act.
    Who ever die we have to respect the death. This the teaching of Islam.
    We have to correct this kind of differentiates.

    ReplyDelete
  2. கேவலத்திலும் கேவலம். இப்படியான இழிவான கூட்டங்கள் எம்முடைய சமுதாயத்தின் கேவலங்கள்

    ReplyDelete
  3. Yes indeed it was a shameful act of the Muslim community. I appreciate comments of the Attalachenai teachers. Our community have plenty to learn

    ReplyDelete
  4. We have in the uk some graveyard only for some speical indian communtiy ..some Gujrtis have this

    ReplyDelete
  5. அட்டாலச்சேனையில் இந்த விடயத்தை செய்தவர்கள் பெயரில்மட்டும்தான் முஸ்லிம்கள்.
    இந்த விடயத்தில் இஸ்லாமிய மார்கம் என்ன சொல்லியுள்ளது என்று தெரியாதவர்கள் (யூதர் ஒருவரின் ஜனாஸாவை அடக்கம் செய்ய கொண்டுபோனபோது நபி(ஸல்)அவர்கள் அந்த ஜனாஸாவை கண்ணியப்படுத்தி எழுந்து நின்றுவிட்டு அதுவும் ஒரு உயிராகத்தான் இருந்தது என்று கூறிவிட்டு அவ்வாறு கண்ணியப்படுத்த ஏவினார்கள்.

    இந்த இழிசெயலை செய்தவர்களே ஏன் செய்தீர்கள்?! பிரமத்தார் பிரயானிக்கும் வாகனங்களில் நீங்கள் பிரயாணித்ததில்லையா?

    எத்மனையோ தொழிட்சாலைகளில் பிரமதத்தார் அவர்களின் கரங்கள் பட்டு செய்யப்படுகின்ற எத்தனையோ உணவு பண்டங்களை உண்னுகின்றீர்கள் ஆடைகள் அணிகின்றீர்கள் அவர்கள் பிரயாணிக்கும் வாகனங்களில் அதே ஆசனங்களில் அமர்ந்து பிரயாணிக்கின்றீர்கள் ஏன் இப்படியான ஒரு இழிசெயலை செய்தீர்கள்?

    குறிப்பு இந்த விடயத்தில் இஸ்லாம் என்ன சொல்லியுள்ளது என்று தெரிந்த நசீர் அஹ்மது அந்த பிரேதத்தை வாகனம் கொடுத்து கண்ணியப்படுத்தியுள்ளார்.

    ReplyDelete
  6. Shameful. But Mr. Nazeer is grateful.

    ReplyDelete
  7. எங்களுடைய வீட்டில்தான் ஒரு வருட காலமாக தங்கி இருந்தார் அந்த பென்மனி மிகவும் மனிதநேயம் உள்ளவராகவும் அன்பாக பழக கூடியவராகவும், முஸ்லிம்கள் பற்றிய நல்லென்னம் கொண்டிருந்தார், இவர்களுக்கு எமது கீழ்த்தரமான நடத்தைகளை காட்டின அந்த நபரை மக்களுக்கு முன் அடையாள படுத்த வேண்டும்...

    ReplyDelete
  8. விட்டு விடுங்கள். இனிமேலாவது இப்படியான பெரும் தவறுகள் நடக்காதவாறு எம்மை நாம் பாதுகாத்துக்கொள்வோம்.

    ReplyDelete
  9. kevala ketvanunga ...neengallam muslimkal enru solvathe aniyayam...

    ReplyDelete

Powered by Blogger.