Header Ads



மதுஷின் மனைவி, ஐ.தே.க. மகளிர் அமைப்பின் தலைவரா..?

மாக்கந்துரே மதுஷூக்கும் எனக்கும் இடையிலான தொடர்பு என்று பார்த்தால் அவர் நான் குடியிருக்கும் வீட்டுக்கு அருகாமையிலேயே திருமணம் முடித்து குடியேறினார், அந்த அடிப்படையிலேயே நான் அவரை அறிவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எனது குடும்பத்திற்கும் மாக்கந்துர மதுஷூக்கும் இடையில் தொடர்பு உள்ளது என வீண்பழி சுமத்துபவர்கள் பௌத்த தர்மத்தின்படி தண்டனை பெறுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியில், மாக்கந்துரே மதஷூக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

மதுஷூக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது, மாக்கந்துரே மதுஷ் என்று கூறப்பட்டாலும் அவரது சொந்த ஊர் கம்புறுப்பிட்டிய, மதுஷ் சிறு வயதிலேயே அவரது தாயை இழந்தவர்.

மதுஷின் தாய் ஜே.வி.பியின் செயற்பாட்டாளரா என்பது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன, பாதுகாப்பு படையினரால் மதுஷின் தாய் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

அவரது இறப்பின் பின்னர் மதுஷின் தந்தை வேறொரு பெண்ணை திருமனம் செய்து கொண்டார்.

மதுஷ் கம்புறுப்பிட்டிய பாடசாலையில் கல்வி கற்றார், அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணொருவரும் அதே பாடசாலைக்குச் சென்றார். அவ்விருவருக்கும் காதல் தொடர்பு ஏற்பட்டு பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அப்பெண்ணின் பெயர் கயனி.

எங்களுக்கிடையில் உள்ள ஒரே தொடர்பு அந்த திருமணம் மாத்திரமே. அவர் திருமணம் முடித்து அவரது மனைவி வீட்டிலேயே குடியேறினார்.

அவ்வீட்டிலிருந்து ஒரு கிலோ மீற்றர் சுற்றுவட்டாரத்தில் ஐந்து அரசியல்வாதிகளின் வீடுகள் இருந்தன.

எனது பெரிய தந்தையின் மகன் மகிந்த யாபா, சரத் யாபா, எனது வீடு, அத்துடன் எனது மகன் பசந்த யாபா மற்றும் டெனீ ஹித்தெட்டியகே ஆகியோரது வீடுகளே அவை.

மதுஷ் வாழ்வதற்கு கடுமையான போராட்டங்களை மேற்கொண்டவர், பல்வேறு தொழில்களைச் செய்தார்.

கருவாடு மற்றும் விறகு விற்பனை போன்ற பல்வேறு தொழில்களில் அவர் ஈடுபட்டார்.

அவ்வாறானதொரு சந்தர்ப்பத்திலேயே டெனீ ஹித்தெட்டியகேவின் மைத்துனர் மதுஷின் காலில் மோட்டார் சைக்கிளினால் மோதி விட்டார்.

அங்குதான் முதலாவது மோதல் தோன்றியது, மதுஷ் உள்ளிட்டோர் குடியிருந்த காணியை கைத்தொழில் பேட்டை அமைப்பதற்காக டெனீ ஹித்தெட்டியகே சுவீகரித்தமையால் அவர் அங்கிருந்து செல்ல வேண்டி ஏற்பட்டது.

அதன் பின்னர் மதுஷின் வீட்டிற்குச் சென்ற டெனீ ஹித்தெட்டியகே அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து அவர் அந்த ஊரிலிருந்து நீர்கொழும்புக்கு சென்றார் என கூறப்பட்டது.

அங்கு கொலையொன்றில் ஈடுபட்டு அதற்காக சிறை சென்றார், அதன் பிறகு அவருடன் எந்த தொடர்பும் கிடையாது.

1999ஆம் ஆண்டில் மதுஷின் வீட்டில் கூட்டமொன்று நடந்ததாக நினைவிருக்கின்றது, மதுஷின் மனைவி ஐக்கிய தேசியக் கட்சியின் மகளிர் அமைப்பின் தலைவராக இருந்தார்.

நான் அக்காலப்பகுதியிலேயே ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தேன், அப்போது தான் மதுஷ் எனக்கு அறிமுகமானார், அதன் பின்னர் எந்த தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.