Header Ads



மைத்திரியே மீண்டும் ஜனாதிபதி, ஐ.தே.க. வேட்பாளரே எமது பொது எதிரி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மட்டுமல்லாது விரிவான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராகவும் மைத்திரிபால சிறிசேன இருப்பார் எனவும் அவர் இரண்டாவது முறையாகவும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவிக்கு வருவார் எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

காலியில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தேர்தலுக்கு முன்னர் விரிவான கூட்டணி உருவாக்கப்படும். ஜனாதிபதித் தேர்தலை கண்டு நாங்கள் அச்சப்படவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரே எமது பொது எதிரி. பொதுவான போராட்டத்தின் மூலம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவோம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்பதை கூற சிலர் பயப்படுகின்றனர். மைத்திரிபால சிறிசேனவே இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதி பதவிக்கு வருவார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான தற்போதைய ஜனாதிபதியை நீக்கி விட்டு கட்டியெழுப்பப்படும் கூட்டணி என்ன?. புதிய கூட்டணியின் தலைமைத்துவமும் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பும் ஜனாதிபதிக்கே வழங்கப்பட வேண்டும். அவருக்கு வழங்காமல் எதனையும் செய்ய முடியாது.

எந்த தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை மக்களிடமே கேட்க வேண்டும். நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதித் தேர்தலை எதிர்பார்க்கின்றனர்.

அதற்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். எனினும் மாகாண சபைத் தேர்தலே நடத்தப்படும் எனவும் நிஷாந்த முத்துஹெட்டிகம குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.