Header Ads



"ஆயுதங்கள் யார் வீட்டிலிருந்து எடுத்தாலும், அவர்களின் இனங்களை சுட்டிக்காட்ட அவசியமில்லை"

ஆயுதங்கள் யார் வீட்டிலிருந்து எடுத்தாலும் அவர்களின் இனங்களை சுட்டிக்காட்டவேண்டிய அவசியமில்லையெனத் தெரிவித்த பிரதியமைச்சர் ஆயுதங்கள் யார் வீட்டிலிருந்து எடுத்தாலும் அவர்களின் இனங்களை சுட்டிக்காட்டவேண்டிய அவசியமில்லை  காவியுடை அணிந்தோரும், வெள்ளை ஆடைகளை அணிந்தோரும் இல்லாத தீயை மூட்டுவதற்கு முயற்சிக்கின்றனர் என்றார்.

மாவனெல்லை, புத்தளம் ஆகிய பிரதேசங்களில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட விவகாரம் தொடர்பில் சகருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், 

கேகாலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் வீட்டிலிருந்தும் அண்மையில் ஆயுதங்கள் மீட்கப்பட்டன. ஆயுதங்கள், முஸ்லிம்களின் வீட்டிலிருந்தா? சிங்களவர் வீட்டிலிருந்தா அல்லது தமிழர்களின் வீட்டிலிருந்தா ஆயுதங்கள் மீட்கப்படுகின்றன என்பது பிரச்சினையில்லை. ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளமைதான் பிரச்சினையாகும் என்றார்.

அவைத் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். எனினும், காவியுடை அணிந்தோரும், வெள்ளை உடையை அணிந்தோரும் இல்லாத தீயை உருவாக்க முயற்சிக்கின்றனர் என்றுத் தெரிவித்த அவர், அவ்வாறு வெள்ளை உடையணிந்தவர்கள்தான், அடுத்தவரின் புத்தகத்தை தன் பெயரில் அச்சடித்துகொண்டனர் என்றார்.

No comments

Powered by Blogger.