Header Ads



தீவிரவாத இயக்கம் ISIS இன் உயிர் ஊசலாடுகிறது பயங்கரவதி பக்தாதி கொல்லப்பட்டானா..? கைது செய்யப்பட்டானா..??

ஈராக்கை போல சிரியாவிலும் தங்களது கட்டுப்பாட்டு நிலங்கள் அனைத்தையும் இழந்துருக்கும் ஐஸ்ஐஸ் யூப்ரடீஸ் நதிக்கரையில் இருக்கும் மராஷிதா என்ற ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள கிராமத்தில் முற்றுகையிடப்பட்டிருக்கும் நிலையில், அந்த இயக்கத்தின் தலைவன் அபூ பக்கர் பக்தாதி கைது செய்யப்பட்டதாக நேற்று முதல் சில சர்வதேச ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை SDF குர்து போராளிகள் மறுத்திருக்கிறார்கள்.

பக்தாதி குறிப்பிட்ட பகுதிக்குள் சிக்கியிருந்தால் எந்தநேரமும் கைது செய்யப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கின்ற போதிலும், உள்ளேயிருந்து வெளியேறி குர்து போராளிகளிடம் சரணடையும் ஐஸ்ஐஸ் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கூற்றுக்கு அமைய பக்தாதி அந்த பிரதேசத்தில் இருந்து தப்பியோடி ஈராக்கில் மறைவிடம் ஒன்றில் ஒளிந்திருப்பதாகவும் செய்திகள் வெளிவர தொடங்கியிருக்கின்றன. (ஒளிந்திருத்தல் என்பது இவர்களின் தேசிய கொள்கையோ என்னவோ என்று எண்ணத்தோன்றுகின்றது)

இதில் இன்னுமொறு முரணநகையும் இருக்கிறது. கடந்த வருடம் ஈராக் மோஸூல் நகரில் நடந்த இறுதி யுத்ததின் போது குண்டு தாக்குதல்களில் இருந்து தப்பிப்பதற்காக வெளியறிய நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை தாருல் இஸ்லாத்தில் இருந்து தாருல் குப்ரை நோக்கி வெளியேற அனுமதிக்க முடியாது என்று அறிக்கையிட்டு சுட்டு கொலை செய்திருந்த தாயிஷின் தலைவர்கள் இன்று தங்களது குடும்பங்களை குர்து போராளிகளிடம் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியேறுவதற்கு அனுமதியளித்திருக்கிறார்கள்.

அதுபோக வெளியேறியவர்கள் சொல்வதை போல ஒருவேளை பக்தாதி ஈராக்கில் ஒளிந்திருந்தால், அவரும் சாட்சாத் அதே தாருல் குப்ரில் ஒளிந்திருக்கும் so called கலீபாதான்

உண்மை நிலை இவ்வாறு இருக்க, தங்களது குடும்பத்தோடு பாதுகாப்பாகவும் வசதியாகவும் வாழ்ந்துகொண்டு சமூக ஊடகங்களில் பேக் ஐடிகளுக்குள் வெளிவரும் அல்லது ஒளிந்திருக்கும் கருங்குஞ்சிகள் சில அப்பாவி இளைஞர்களை குறிவைத்து நமக்கு அங்கேயொரு கலீபா இருக்கிறார், பெரும் நிலப்பரப்புடன் கூடிய கிலாபத்து இருக்கிறது என்று பொய்யான தகவல்களை கொண்டுமூளை சலவை செய்ய எத்தனித்து வருகிறார்கள். சொல்லப்படும் தகவல்களை உறுதிப்படுத்த தெரியாமல் அல்லது முடியாமல் ஒரு சில அப்பாவி இளைஞர்கள் வழிதவறி போகும் ஆபத்து இருக்கிறது. அவ்வாறு வழி தவறியவர்கள் மீள முடியாத சிக்கல்களில் மாட்டிக்கொள்வதையும் அவர்களின் குடும்பங்கள் கோட் கேஸ் என்று ஒப்பாரி வைத்து திரியும் நிலை ஆங்காங்கு ஆரம்பமாகியிருக்கிறது.

கூரையேறி கோழி பிடிக்க முடியாத இந்த கூட்டத்தை நம்பி வானம் ஏறி வைகுண்டம் போகப்போகிறோம் என்று இலங்கையில் சில அப்பவி இளைஞர்கள் உசுப்போத்தப்படுவதை தடுப்பதும் அவர்களின் சிந்தனை சிக்கல்களில் இருந்து மீட்டெடுப்பதும் சமூக தலைவர்கள், மார்க்க தலைவர்கள், குடும்ப தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் நண்பர் வட்டாரங்களின் பொறுப்பாக மாறியிருக்கின்றது.

By. Dilshan Mohamed

5 comments:

  1. He never been killed or captured.He and his senior officers are well protected and well informed,about when & where the attack is going to happened.So they can move to safe place when attack take place.They are none Muslim mercenaries hired to attack Muslim countries to revenge the defeat of UN resolution against Srilanka.

    All the problem started in 2010 the year the resolution was defeated.So Muslim countries purchased the problem of others involving in Saving Srilanka.For that good work Sinhalese attacking and burning Muslims property.For that they are getting money from Tamil Diaspora,who are so and and so angry because Jamiathul Ulama's involvement in UN case.so they conspired with BBS sponsored by Norway.Now hiring Muslim terrorist to attack Buddha's statue to escalate the problem.So root of all the problem in Srilanka is result of Tamil Terrorism

    ReplyDelete
  2. Islam means peace and gentleness & nothing beyond. The Srilankan government must take stern measures to comb out terrorism & drugs smuggling from its root. I reckon execution of death sentence is greatly important in this cause.

    ReplyDelete
  3. Islam means peace and gentleness & nothing beyond. The Srilankan government must take stern measures to comb out terrorism & drugs smuggling from its root. I reckon execution of death sentence is greatly important in this cause.

    ReplyDelete
  4. இந்த முஸ்லிம் பயங்கரவாதியின் அழிவு, இல்ங்கை ISIS ஆதரவாளர்களுக்கு சோகம் தான்.
    ஆனால், உலகம் முழுவதும் நுற்றுகனக்கான முஸ்லிம் பயங்கரவாத குழுக்கள் உள்ளன, அதில்ல ட்சக்கணக்கில் உறுப்பினர்கள் உள்ளனர். so be happy

    ReplyDelete

Powered by Blogger.