Header Ads



சு.க.க்கு புதியதொரு தலைவர் அவசியம்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு சிறந்த புதிய தலைமை அவசியம் என்று பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கூறியுள்ளார். 

புதிய தலைமை இன்றி ஶ்ரீலங்கா சுதந்திக கட்சிக்கு எதிர்காலப் பயணம் இருக்காது என்று அவர் கூறியுள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது அவர் இந்தக் கருத்தை வௌியிட்டுள்ளார். 

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க, ச்நதிரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பாதுகாத்ததாகவும் தற்போது இருக்கின்ற தலைவர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தொடர்பில் அக்கறை செலுத்துவதில்லை என்றும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.