Header Ads



அடிப்படைவாதிகளை எதிர்கொள்ள, அஷின் விராதுடன் கலந்துரையாடல் - பொதுபல சேனா அறிவிப்பு

இலங்கையிலுள்ள அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள், முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் என்பன தொடர்பில் மியன்மாரில் செயற்பட்டு வரும் 969 பௌத்த அமைப்பின் தலைவர் அஷின் விராது தேரருடன் கலந்துரையாடி இருக்கின்றோம்.

ஞானசார தேரரின் விடுதலை தொடர்பிலும் சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை ஒன்றைக் கையளிப்பதற்கு விராது தேரர் எதிர்பார்த்துள்ளார் என பொதுபலசேனா அமைப்பின் தலைவர் டிலந்த விதானகே தெரிவித்தார்.

மியன்மாரில் இயங்கிவரும் 969 அமைப்பின் தலைவர் அஷின் விராது தேரர் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு அண்மையில் செய்தியொன்றினையும், நினைவுச்சின்னம் ஒன்றையும்  அனுப்பியிருந்தார். 

அச்செய்தியில், தேசிய ரீதியான நோக்கம் ஒன்றுக்காக நீங்கள் உங்களது வாழ்க்கையையும், சுதந்திரத்தையும் ஆபத்தான நிலைக்கு உட்படுத்தியமை குறித்துப் பெருமையடைய வேண்டும். சரியான விடயமொன்றிற்காக போராடுபவர் ஆரம்பத்தில் தவறிழைப்பவராகப் பார்க்கப்பட்டாலும், இறுதியில் அவரே வெற்றியடைவார். நீங்கள் தான் இலங்கையின் வீரர். மியன்மார் உங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது எனக் குறிப்பிட்டிருந்தார்.

இச்செய்தி தொடர்பிலான பொதுபலசேனா அமைப்பின் கருத்து என்னவென்று வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

1 comment:

Powered by Blogger.