வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாங்கத்துக்கு, எதிராக மக்கள் விழித்தெழ வேண்டும் - மஹிந்த
வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விழித்தெழ வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ரஜபக்ஷ கூறியுள்ளார்.
இன்று நாரஹேன்பிட்ட அபயாராம விகாரைக்கு வந்திருந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அரசாங்கம் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றாது நாட்டை துண்டுகளாக உடைத்து காட்டிக் கொடுப்பதற்கு முற்படும் சந்தர்ப்பத்தில் மக்கள் முழுமையாக அதற்கு எதிராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
தற்போது இருக்கின்ற நிலையில் அரசியலமைப்பை தாக்கல் செய்ய முடியாது என்றும் அதற்கு காரணம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இன்மையே என்று அவர் கூறியுள்ளார்.

Post a Comment