எனது முதலாவது, எதிர்பார்ப்பு இதுதான்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு சென்றுள்ள எமது கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைத்துக் கொண்டு கட்சியைப் பலப்படுத்துவதே தனது முதலாவது எதிர்பார்ப்பு என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக பதவியேற்ற
தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தனித்துவங்களைப் பேணி தடைகளை உடைத்தெறிந்து கொண்டு பரந்தளவிலான கூட்டணி ஒன்றை அமைப்பதே எம்முன்னுள்ள பாரிய பொறுப்பாகும். இதற்காக எமது கட்சியிலிருந்து சென்றுள்ள சகலருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.
முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாசவுக்கு ஜனாதிபதியின் ஆலோசகர் பதவியொன்றை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment