Header Ads



தைப்பொங்கலுக்கு புத்தாடை எடுத்து, கொடுக்கவில்லையென மனைவி தற்கொலை


ஓடாவி வேலை செய்துவரும் ஜீவராசா நிர்மலேஸ்வரன் (32)என்பவரை , திருமணம் செய்துள்ள  செல்லத்தம்பி புஸ்பராணி(26) என்பவர் நான்கரை வயது பெண் குழந்தையொன்றுக்கு தாயாவார்.

ஓடாவித் தொழில் செய்து வரும் நிர்மலேஸ்வரனுக்கு சில நாட்களாக தொழில்கள் எதுவும் சரிவராததால்,  நாளை (15/01) தைப்பொங்கள் பெருநாளை கொண்டாடக்கூட வசதியின்றி இருந்துள்ளார்கள்.

இந்த நிலையில் கணவரோரு புத்தாடை வாங்க பணம் தருமாறு கேட்டு நேற்றிலிருந்து முறன்பட்டுள்ளார்.

இன்று (14/01) காலை விழித்தெழுந்ததும், புத்தாடை பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளது.

நான்கரை வயது மகளுடன் வீட்டின் விறாந்தையில் இருந்து கொண்டிருந்த கணவருடன், தொடர்ந்து நச்சரித்துக்கொண்டு இருந்த மனைவியிடம் புதுவருடத்துக்கு கடனுக்கு வாங்கிய ஆடைகளுக்கே இன்னும் பணம் கொடுத்து முடியல்ல. கொஞ்சம் பொறுமையாயிரு!,

சித்திரைக்காவது எடுத்துத் தருகிறேன் என்று கூறியபோது, கணவனோடு சண்டையிட்டு,  "இரு உனக்கு காட்டுறன் வேல " என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்று கதவை பூட்டியுள்ளார்.

குழந்தையோடு விளையாடிகொண்டிருந்த கணவன், வீட்டுக்குள் சென்ற மனைவியை பத்துநிமிடமாகியும் காணவில்லை என்பதால்,

புஸ்பா, புஸ்பா என கணவரும், அம்மா, அம்மா என குழந்தையும் அழைத்த போது, பதிலேதும் கிடைக்காததால் வீட்டின் யன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற கணவன்,

படுக்கையறை காற்றாடியில் சாறியொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு, அயலவர்களை சப்தமிட்டு அழைத்து, கழுத்தில் கட்டப்பட்டிருந்த சாறியை கத்தியினால் அறுத்து, அவசரமாக சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது,  கடமையிலிருந்த வைத்தியர் மூலம், இவர் இறந்துவிட்டார் என்ற தகவலை பெற்றுள்ளனர்.

விடயத்தை ஏறாவூர் பொலிசாருக்கு தெரிவிக்க, அவர்கள் மூலம் எனக்கு தெரிவிக்கப்பட, நீதிபதியின் கட்டளைக்கு அமைவாக,  தடயவியல் பொலிசாருடன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரனைகளை மேற்கொண்டு, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்து,  பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை கணவரிடம் ஒப்படைத்தேன்.

அவ்வாறே #கரடியனாறு #பொலிஸ் #பிரிவிலும், பெரிய புல்லுமலையை சேர்ந்த புஞ்சிபண்டா ரவிச்சந்திரன் (33) என்ற குடும்பஸ்தரும், போதை காரணமாக 05/01 அன்று கிருமி நாசினியை உட் கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்து, இன்று அதிகாலைவரை மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று மரணித்தார்.

அவரது பிரேத பரிசோதனையையும் முடித்து மனைவியிடம்,  சடலத்தை ஒப்படைத்தேன்.

சிறிய சிறிய காரணங்களுக்காக தமிழ் சகோதர. சகோதரிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமை தற்போது அதிகரித்து வருவதை காணக்கூடியதாகயிருக்கிறது.  இதற்கான மாற்றுத்திட்டத்தினை தமிழ் தலைமைகள் முன்னெடுக்க வேண்டுமென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

-Mohamed Nasir-

4 comments:

  1. There's no pragmatic solution to instill mind-contentment except Islam. We want to enlighten Tamils about Islam.

    ReplyDelete
  2. You we can see that in Middle East and other Muslim countries.

    ReplyDelete
  3. @mohamed Ifaz,
    Dying or Commiting suicide is better rather than embrace Islam.

    ReplyDelete
  4. நாி புத்தி சொன்னால் வீட்டில் உள்ள கோழிகள் கவணம்

    ReplyDelete

Powered by Blogger.