ஹிஸ்புல்லாவுக்கு எதிரான ஹர்த்தால், தமிழ் - முஸ்லிம் உறவை சிதைத்து அரசியல் ஆதாயம்தேடுவோரின் சதி
கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக நாளை (25.01.2019) ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் உணர்வாளர்கள் என்ற அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.மேற்படி ஹர்த்தாலுக்கு அழைப்பு தமிழ் முஸ்லிம் உறவை சிதைத்து அரசியல் ஆதாயம் தேட முற்படும் குழுவினரின் சதி என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முபீன் மேலும் தனது அறிக்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சிறுபான்மை இனம் சார்ந்தவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட வேண்டுமென தமிழ் முஸ்லிம் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.கடந்த காலங்களில் ஜனாதிபதிகளாக பதவி வகித்தவர்கள் சிங்கள சமூகம் சார்ந்தவர்களையே வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு ஆளுநர்களாக நியமித்திருந்தனர்.யாரும் எதிர்பாராத வகையில் மேதகு ஜனாதிபதி அவர்கள் வடக்கு கிழக்கு ஆளுநர்களாக சிறுபான்மை சார்ந்தவர்களை தற்போது நியமித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் சார்ந்தும் பல பணிகளை முன்னெடுத்தவர்.ஆளுநர் என்பவர் எந்த சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் குறித்த சமூகம் சார்ந்து செயற்பட முடியாது.அதனை ஆளுநரும் தெளிவாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே குழப்பங்களை உருவாக்கியவர்களே இன்று ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவராக தன்னை அறிமுகப்படுத்தி சமூக வலைத்தளங்களில் இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருப்பவர் முஸ்லிம்களின் காணிகளை பலவந்தமாக பிடித்து வருவதாகவும் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வன்செயல்களுக்கு பின்னணியிலிருந்து செயற்பட்டு வருபவர் என்றும் முஸ்லிம் மக்கள் கருதுகின்றனர்.மேலும் அண்மையில் மட்டக்களப்பில் கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக கையொப்ப வேட்டை திரட்ட அழைப்பு விடுத்தவர் காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலையோடு நேரடியாக சம்பந்தப்பட்டவர் என்ற உறுதியான நம்பிக்கை காத்தான்குடி மக்களுக்கு உண்டு என்பதுடன் அவரின் மிகப்பெரும் தவறை மன்னித்து அவரை அதே பள்ளிவாயலுக்கு அழைத்து வந்து பொன்னாடை போர்த்தி தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியவரே கிழக்கு மாகாண ஆளுநர் என்பதும் இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
கிழக்கு மாகாண தமிழ் மக்கள் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ள தீய சக்திகள் மீது அவதானத்துடன் இருக்க வேண்டுமென்பதுடன் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையே நமது சிறுபான்மை சமூகங்களின் உரிமையை பெற்றுத்தரும் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டுமென யு.எல்.எம்.என்.முபீன் மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தால் அழைப்பு தமிழ் முஸ்லிம் உறவை சிதைத்து அரசியல் ஆதாயம் தேட முற்படும் குழுவினரின் சதி -ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன்
(ஆதிப் அஹமட் )

தமிழ்- முஸ்லிம் உறவை கிழக்கில் சிதைக்கும் நோக்குடன் தான் இந்த பதவி ஹிஸ்புல்ல விற்கு கொடுக்கப்பட்டது
ReplyDeleteஎனவே மைத்திரியின் தந்திரோபாயம் தற்போது வரை வெற்றியழித்துள்ளது
உங்கட ஹர்த்தால இரவில் வைத்தால் கடைகள் மட்டுமல்ல சகல வீடுகளும் பூட்டப்பட்டு இருக்கும்.
ReplyDeleteமுஸ்லிம்கள் கடை மூடும் வெள்ளிக்கிழமையில் ஹர்த்தால் வைப்பதில் இருந்து உலகிற்கு ஒரு விஷயம் தெளிவு. உங்கட ஹர்த்தால் வெற்றி பெறுவதற்கும் நீங்கள் முஸ்லிம்களில்தான் தங்கி வாழ வேண்டி இருக்கிறது
உங்களுக்கு துணிவு இருந்தால் திங்கள் செவ்வாய் புதன் வியாழன் தினங்களில் ஹர்த்தால வைக்கோ பார்ப்போம் உங்கள் பலத்தை.
இது ஒரு “முஸ்லிம் கவர்னருக்கு எதிரான போராட்டம்” என தவறாக சில முஸ்லிம் இனவாதிகள் பிரச்சாரம் செய்கிறார்கள்.
ReplyDeleteஉண்மையில், இது மற்றய மதங்களின் காணிகளை மோசடி செய்த இனவாதி ஒருவருக்கு எதிரான போராட்டம்.