Header Ads



7 முஸ்லிம் மாணவர்களுக்கும், உதவப்போவது யார்...?

சிதைவுற்ற புராதன தாது கோபுரத்தின் மீதேறி புகைப் படமெடுத்த மாணவர்களை கண்டித்து விடுவிக்க சட்ட உதவிகளை தலைமைகள் வழங்குமா?

தண்டனையாக அன்றி ஒழுக்காற்று நடவடிக்கையாக அவர்களுக்கு நீதி வழங்கப்படல் வேண்டும் என எதிர் பார்க்கிறோம்!

கலாச்சார விவகார அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேற்படி விடயத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆதிகாரிகளை பணித்துள்ள நிலையில், அரசின் பங்காளி முஸ்லிம் தலைமைகள் சட்ட முதுமாணிகள் இது தொடர்பாக அமைச்சருடன் பேச வேண்டும்.

சட்டம் ஒழுங்கு அமைச்சரான ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதி கிழக்கு ஆளுனரும் தலையிடுவதன் மூலம் விவகாரம் இலகுவாக முடிவிற்கு கொண்டுவரப்பட முடியும்.

மேன்முறையீட்டு மணு ஒன்றை தாக்கல் செய்து அவர்களை விடுவித்து கற்கைகளை தொடர்வதற்கான வழிவகைகளை அமைச்சர்கள் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

எதிர்க் கட்சித் தலைவருடன் நெருக்கமாக இருக்கும் அரசியல் தலைமைகளும் நாட்டின் தற்போதைய களநிலவரத்தை கருத்தில் கொண்டு விவகாரம் அரசியலாகாமல் தடுக்கவும் இலகுவாக முடிவிற்கு கொண்டு வரப்படவும் தமது கடமையை செய்வார்கள் எனவும் நம்புகிறோம்.

- Inamullah Masihudeen -

2 comments:

  1. சின்ன குழந்தைகள் போல் தெரியவில்லை.கடுமையான தண்டனை அளிக்கப்படவேண்டும் .

    ReplyDelete
  2. தாது போபுரங்களை பற்றி ஆண்டு 5 பாடப்புத்தகத்திலேயே உள்ளது.
    படிப்பறிவுயற்றவர்கள் எனில் மன்னித்து விடல் அவசியம்.
    இவர்கள் university வரை படித்தவர்கள், எனவே இது வேண்டுமென்றே செய்துள்ளார்கள், கடும் தண்டணை அவசியம்

    ReplyDelete

Powered by Blogger.