Header Ads



7 முஸ்லிம் மாணவர்களையும், மன்னித்து விட்டுவிடுங்கள் - Dr. குணசிங்கம் சுகுணன் உருக்கமான கோரிக்கை

இந்த பௌத்த அடையாளம் ஒன்றின்மீது சப்பாத்து காலுடன் ஏறிநின்று அவமதித்தார்கள் என்ற அடிப்படையில் அவர்களாகவே முகநூலில் தரவேற்றிய புகைப்படம் ஒன்றை ஆதாரமாக வைத்து கைது செய்துள்ளீர்கள்.

இது சுற்றுலா சென்ற மாணவர்கள் அறியாது விட்ட தவறு.

கடந்த காலத்தில் தமிழ் சிறுமி ஒருவர் சிகிரியா குன்றில் எழுதியதாக பேரினவாதம் சிலிர்த்துக் கொண்டபோது மூதன்முதலில் குரல்கொடுத்தவர்கள் முஸ்லிம் மக்களே.

சிங்களவர்கள் எங்கள் கோவில்களுக்குள் சப்பாத்து கால்களுடன் எத்தனை தடவை மிதித்தீர்கள்? பள்ளிகளையும் கோவில்களையும் எத்தனை எத்தனை தரம் இடித்தீர்கள்? இன்றுவரை எத்தனை முஸ்லிம்களின் வியாபார தலங்கள் அறியா காரணங்களால் எரிந்து போகிறது. காரணத்தை கண்டுபிடித்தீர்களா?

மாணவர்களை நெறிப்படுத்த வேண்டுமேயன்றி அவர்களின் ரோச உணர்வுகளை உரஞ்சி தீவிரவாத எண்ணங்களை விதைத்து விடாதீர்கள்.மனிதன், மாணவன் என்று நடவுங்கள். 

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுருவிய சிங்கள மாணவனுக்கு விருது வழங்கி கௌரவித்தவர்கள் நீங்கள். 

விட்டுவிடுங்கள் நாளை அவர்கள் இலங்கையன் என்ற மனநிலையோடு வாழட்டும்.

மகிழ்ச்சி

Dr. குணசிங்கம் சுகுணன்
வைத்திய அத்தியட்சகர்
ஆதார வைத்தியசாலை 
களுவாஞ்சிகுடி.




15 comments:

  1. வேறு ஒன்றுமில்லை சிங்களவனுக்கு மூலை கெட்டு விட்டது.

    ReplyDelete
  2. Great
    Dr Sugunan
    This country needs people like you who thinks and conduct them rationally.
    It's a mistake by those children.
    If they knew it they would not have released those photos in social medias.
    Any right thinking human being knew it.
    We plead those hypocrites to release those children without harassing and hurting them.
    Let them realize they are also citizens of this country and not to repeat these types of silly mistakes and value and respect other religions and their valuable historical heritages.

    ReplyDelete
  3. ஐயா நன்றி நன்றி மனிதாபிமனம் இன்னும் உயிர் வாழ்கிறது அந்த இடத்தில் செய்ய கூடாதவைகளை அறிவித்தலாக காட்சிபடுத்தியிருக்க வேண்டும் வேகமா வரும் வெள்ளத்திலும் உயர்ந்து வரும் அலையிலும் செல்பி எடுக்கும் வயது எனவே மன்னிப்பது தான் மனிதம்

    ReplyDelete
  4. ஐயா Dr. குணசிங்கம் அவர்களே, இறைவன் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையையும் தொழில் அபிவிருத்தியையும் தருவானாக. உங்கள் மனநிலையில் எல்லோரும் இருந்துவிட்டால் நாங்கள் அனைவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளே. உங்கள் உள்ளம் எப்படி இருக்கும் என்பதை உங்கள் பால் போன்ற முகமே தெளிவாகச் சொல்கின்றது. வாழ்க ஜயா தங்களின் மனித நேயம்.

    ReplyDelete
  5. இது தான்டா என் தமிழனின் பண்பு, இப்படிபட்ட குணமுள்ள ஒரு முஸுலீம் தமிழருக்காக குரல் கொடுத்திருப்பானா???
    குரவலையை கடித்து தான் திண்டிருப்பான்.

    ReplyDelete
  6. Dr

    உங்கள் மனிதத்துவம் வாழட்டும் வளரட்டும்.............

    ReplyDelete
  7. உங்களை போன்ற நல்ல தமிழர்கள் எப்பொழுதும் எமக்கு சகோதரர்கள் தான் தீவிரவாதிகளையும் அடிப்படைவாதிகளையும் தவிர

    ReplyDelete
  8. My utmost respect for you,doctor. We need people like you for a better coexistence. It's rare to see people with humanity like you.

    ReplyDelete
  9. This is once again proves that right minded people are still available among all communities. I respect the bravery of this gentlemen for issuing such an appeal in public.

    ReplyDelete
  10. உங்களைப் போல் மனித நேயம் கொண்ட மனிதர்களையே இன்று உலகம் வரவேற்கிரது

    ReplyDelete
  11. உங்களைப் போல் மனித நேயம் கொண்ட மனிதர்களையே இன்று உலகம் வரவேற்கிரது

    ReplyDelete
  12. அந்த வைத்தியர் செல்கின்றார் சிறுமி சீகிரியவில் வரைந்தபோது முஸ் லிம்கள் முதலில் குரல் கொடுத்தார்கள் எண்று.ஆனால் இந்த அறிவு கெட்ட அணுசன் இவ்வாறு முஸ்லிம்கள் தமிழனுக்காக குரல் கொடுப்பார்களா எண்று கேட்கிறான் அறிவு கெட்ட மடப்பயல்.

    ReplyDelete
  13. Mr. shan உங்கள் பதிவின் மூலம் உங்களை போன்ற பண்புள்ள தமிழனும் உள்ளான் என்பதை உணர்த்தினீர்கள் நன்றி

    ReplyDelete
  14. Azam ali : நானும் நல்ல பண்புள்ள தமிழன் தான் . இருந்தாலும் முள்ளை முள்ளால் எடுக்கிறேன்.
    எப்ப இந்த ஜப்னா முஸ்லீம் பக்கம் வந்தாலும் பத்தில் ஒரு செய்தி தமிழருக்கெதிரான இனவாத செய்தி தான் இடம்பெறுகிறது.அதுதான் எனக்கு கடுப்பு.
    நீங்களு எப்பாவது தமிழர்களுடன் சகோதரத்துவம் பேணுவோம் , தமிழர்களின் நில அபகரிப்பு என்பது பற்றி ஏதும் செய்தி கணடிருக்கிறீங்களா ,

    ReplyDelete

Powered by Blogger.