Header Ads



4 ஆம் திகதி ஞானசாரரை விடுதலை செய்யாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி தேசிய சுதந்திர தினத்தன்று பொது மன்னிப்பை வழங்குமாறு துறவிகள் குரல் அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாடு, தேசியம், சமயத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோருவதாக அந்த அமைப்பின் தலைவர் முருத்தொட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நாராஹென்பிட்டி அபயராம விகாரையில் இன்று -10- நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கருத்தை வெளியிட்ட விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்வதற்கு பதிலாக அவருக்கு கல்வி ராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமையில் ஞானசார தேரரை விடுதலை செய்யவில்லை என்றால், எதிர்காலத்தில் கடும் நடவடிக்கைகளை எடுக்க போவதாகவும் ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. கண்ணியத்திட்குறிய தேர்ரே விஜயகலா சுட்டிக்காட்டிய விடயம் வடமாகன பகுதிகளில் தற்போது அட்டகாசங்கள் அதிமாக நடக்கின்ற பெண்கள் கற்பழிப்பு சிருவர் துஸ்பிரயோகம் போன்ற ஏனைய அனாச்சாரங்கள் இவைகள் விடுதலை புலிகளின் காலத்தில் இவ்வாறு இங்கு அதிகமாக நடைபெறவில்லை ஆகவே இந்த அனாச்சாரங்களை இவ்விடத்தில் தடுப்பதற்கு விடுதலை புலிகள் மீண்டும் வரவேண்டும் போல் இருக்கின்றது தற்போது இவ்விடயங்களுக்கு பொரறுப்பாக இருப்பவர்கள் இந்த விடயங்களில் பராமுகமாக இருக்கின்றார்கள் என்ற கருத்தை முன்வைத்தாள் இதில் அவள் புலிகள் மீண்டும் உருவாகி நாட்டை அழிக்கவேண்டுமென்று நாடவில்லை *ஆனால் மக்களுக்உ ஒழுக்கத்தை சொல்லும் அந்த சாமி ஞானசார அவர் ஒழுக்கத்தை கடைபிடிக்காமல் நாட்டின் ஒழுக்கவிதிகளை கிழித்து குப்பையில் எரிந்தார் பல இடங்களில் நாட்டுமக்களை பயங்கரவாத முறையில் பயங்காட்டினார் துன்புறித்தினார் சட்டத்தை சொல்லி ஒழுக்கத்தை கடைபிடிக்க சொல்லும் நீதிமன்றத்தை அவரின் அடாவடிதனத்தால் பயங்காட்ட முயற்சித்தார் இவ்வாறு விஜயகலா எவ்விடத்தில் செயல்படவில்லை*!

    ReplyDelete
  2. BrBrothe riyal,realr comment 👍👍

    ReplyDelete

Powered by Blogger.