Header Ads



ஜனாதிபதி பதவி விலகி, வீட்டுக்கு செல்லமுடியும் - முஜிபுர் ரஹ்மான்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்கும் தரப்புடன் பணியாற்ற ஜனாதிபதி தயாராக இல்லை என்றால், அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகி வீட்டுக்கு செல்ல முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையின் விருப்பத்திற்கு அமையவே பிரதமர் நியமிக்கப்படுவார். அதற்கு எதிராக செயற்பட ஜனாதிபதியினால் முடியாது.

யார் பிரதமர் என்பதை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். ரணில் விக்ரமசிங்க பிரதமர் என பெரும்பான்மையான உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதிக்கு விருப்பம் இல்லை என்ற அடிப்படையில் அதனை நிராகரிக்க முடியாது எனவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. சும்மா வீராப்பு பேசுவதை விட்டு , இதை பாராளு மன்றத்தில் நிறை வேற்ற பார்க்கவும்

    ReplyDelete

Powered by Blogger.