பிரதமர் பதவிக்கு சபாநாயகரும், சம்பிக்கவும் போட்டியா..?
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்போது பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று -04- இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தற்போது பிரசாரங்களை மேற்கொண்டுள்ளார். பிரதமர் பதவிக்கு தானே தகுதியானவர் என சம்பிக்க ரணவக்கவும் கூறிவருகின்றார்.
ரணிலே பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் என அவரின் ஆதரவாலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
எனினும், ரணிலுக்கு எக்காணரம் கொண்டும் பிரதமர் பதவியை வழங்க போவதில்லை என ஜனாதிபதி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
நாட்டில் சமஸ்டியை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். ரூபாவாஹினி மற்றும் சுயாதீன தொலைகாட்சிக்கு இன்று அத்துமீறி நுழைந்து மகிந்த ராஜபக்சவின் புகைப்படங்களை நீக்குமாறு அச்சுறுத்தியுள்ளனர்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்று கடவுள் நினைவுக்கு வந்துள்ளார். எனினும், கடந்த மூன்று ஆண்டுகளாக அவருக்கு கடவுள் நினைவிற்கு வரவில்லை.
மத்திய வங்கியில் கொள்ளையிட்ட போது கடவுள் உள்ளார் என்பது அவருக்கு நினைவில் இல்லை. நாட்டில் பாரிய அழிவை ஏற்படுத்திய போது அவருக்கு கடவுள் நினைவுக்கு வரவில்லை.
தற்போது ரணிலுக்கு கடவுள் நினைவுக்கு வந்துள்ளார். ஏனெனில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் கடவுள் நிச்சயம் தண்டிப்பார் என்பதை ரணில் அறிவார் என அவர் மேலும் கூறியுள்ளார்.

Public Do not Trust any one of you now.
ReplyDelete