நீதிமன்ற தீர்ப்பின் பின், மைத்திரி - மகிந்த அவசர சந்திப்பு
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று மாலை நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச சந்தித்துள்ளார்.
இதன்போது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முக்கியமான விடயங்கள் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்களை இன்றிரவு சந்தித்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையை மைத்திரிபால சிறிசேன அறிவிப்பார் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Post a Comment